திரையுலகம் நயன்தாராவுக்கு தெரியுமா இது?

நயன்தாராவுக்கு தெரியுமா இது?

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

தமிழ் சினிமாவில், தற்போது மிக பிசியாக உள்ள நடிகைகளில் “காதல் சொல்ல வந்தேன்” ஹீரோயின் மேகனா ராஜ் கூட ஒருவராக உள்ளார். அவரை பலர் நயந்தாராவோடு ஒப்பிடுகிறார்கள். அதை பற்றி கூறுகையில்-“நான் நயன்தாரா மாதிரி இருப்பதாக கூறி, பலர் என்னை அவருடன் ஒப்பிடுகிறார்கள். தயவு செய்து, யாரும் என்னை அவரோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். தென் இந்திய அளவில் நயன்தாரா பெரிய நடிகை. ஒரு விதத்தில், அது உற்சாகமளித்தலும், எனது நடிப்பும், அவரது நடிப்பும் வெவ்வேறு வகையானது. ஒருவரின் இடத்தை, இன்னொருவர் நிரப்ப முடியாது.

எனது நடிப்பில், என்னோட இயக்குனர்கள் சந்தோஷம் அடைகின்றனர். இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் படம் “கள்ள சிரிப்பழகா”.எனக்கு ஜோடியாக சக்தி நடிக்கிறார். இப்படத்தில் மருத்துவக் கல்லூரி மனைவியாக நடிக்கிறேன். இயக்குனர் ஜீவா, இதை காமெடி கலந்த ஸ்கிரிப்டாக உருவாக்கியுள்ளார். சக்தி காமெடி டைமிங்கில் அசத்துகிறார். அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க, என்னால் ஆனா முயற்சி செய்து வருகிறேன். இப்போது, “நந்தா நந்திதா”, “உயர் திரு 420”, மற்றும் “காதல் வேதம்” படங்களில் நடித்து வருகிறேன்” என்றார் மேக்னா ராஜ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.