பிரபாகரன், மகாத்மா காந்தியுடன் சந்திப்பு…தமிழ் படத்தில்…

விளம்பரங்கள்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

மகாத்மா காந்தி மீண்டும் வந்தால் என்ன நிகழும். என்பதை கருவாக வைத்து உருவாகிகொண்டிருக்கும் படம் ‘முதல்வர் மகாத்மா’. ‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அ.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில் இன்றைய சமூக பிரச்சினைகளை காந்தி, எவ்விதம் எதிர் கொண்டு தீர்வு கண்டார் என்பதும், இளைஞர்களை அவர் அரசியலில் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காந்தி பயணித்த பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலை கண்டு திரும்பி வந்த காந்தியை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சந்தித்து இலங்கை தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து விவாதிப்பது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம் பெறுகின்றன.சுவாரஸ்யமான இந்த காட்சிகளை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.

காந்தியாக கனகராஜ் நடிக்க, இந்தி நடிகர் அனுபம் கெர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தை பார்த்து மிகவும் ரசித்த இளையராஜா, வடஇந்தியர்களையும் கவரும் வகையில் பாடல்களையும், பின்னணி இசையையும் அமைத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: