திரையுலகம் ஒரு வழியாய் முடிந்தது பாலாவின் அவன் இவன்…

ஒரு வழியாய் முடிந்தது பாலாவின் அவன் இவன்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

பாலா படம் என்றாலே ஆண்டு கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது தமிழ் ரசிகர்கள் அறிந்ததே. ஆனால் அவன்-இவன் படத்தை பொறுத்தவரையில் அப்படி நடக்காது. ஆறு மாதத்திற்குள் இப்படத்தை முடித்து விடுவேன். என்று இப்படத்தின் துவக்க விழாவில் பாலாவே அறிவித்திருந்தார்.

பாலாவின் படங்களில் ஒரு அழுத்தம் இருந்தாலும், அதே சமயத்தில் கதையோடு கூடிய காமெடிகளும் இருக்கும். அவன்-இவன் படத்தை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க காமெடி படம்தான். அதனால் இப்படத்தை விரைவிலே முடித்துவிடுவார் என்று எதிர்பார்த்தால், அதிலும் சில சிக்கல்கள். ஆஹா! இந்த படத்தையும் ஆண்டு கணக்கில் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது என்று கோடம்பாக்கமே கிசுகிசுத்தது. ஆனால் அந்த கிசுகிசுக்களுக்கு பூசணிக்காய் மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் பாலா.

முழுப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டு அவன்-அவன் படத்திற்கு பூசணிக்காயும் உடைக்கப்பட்டு விட்டது. கிட்டதட்ட 300 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாலா எடுத்துகொண்டார். இது பாலாவின் முந்தைய படங்களை காட்டிலும் குறைவான நாட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டிருக்கும் பாலா, படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.