திரையுலகம் இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

இன்னும் வரும் என்ற நம்பிக்கையில்தான் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்! த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் எடுக்கப் போகிற முயற்சி இன்னும் நீண்ண்ண்ண்ண்டு கொண்டே போவதால் அது பற்றி பேசினாலே “அட போங்கப்பா…” என்று அலுத்துக் கொள்கிறார்கள் ரசிகர்களும். இருந்தாலும் நடக்கிற விஷயத்தை சொல்லியாக வேண்டுமே!

த்ரி இடியட்ஸ் படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்ட சூர்யா சொல்லாமல் கொள்ளாமல் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். கூட்டத்தில் வந்தால் கூட குறி தவறாமல் பார்க்கும்படி விளம்பரம் கொடுத்திருந்தார் கே.வி.ஆனந்த். இந்த திடீர் அறிவிப்பு திரையுலகத்தை குழப்பத்தில் ஆழ்த்த மறுபடியும் த்ரி இடியட்ஸ் வருமா? வராதா? கேள்விகள்…

விசாரித்தால் இரண்டு படங்களிலும் மாற்றி மாற்றி நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் சூர்யா. ஆனால் ஒரு பிரச்சனை. கால்ஷீட்டுக்காக நீங்கள் இருவருமே மார்ச் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறிவிட்டாராம் ஷங்கரிடமும், ஆனந்திடமும்! அதுவரைக்கும் சூர்யாவை வேறெங்கும் போக விடாமல் கட்டிப் போட்டிருக்கிற படம் ஏழாம் அறிவு.

ஒரு விஷயம் புரிஞ்சுருச்சு… ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார் என்றால், சூர்யாவுக்கு கெட்டப் இல்லைன்னு அர்த்தம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.