கலையை மட்டும் தான் கமலிடம் இருந்து ஸ்ருதி கற்றுள்ளார்…

விளம்பரங்கள்

shruthihassan

கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

ஸ்ருதி அளித்த பேட்டி வருமாறு:- நடிகையானது என் சிறு வயது கனவு இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்ப பிடிக் கிறது. இசையமைப்பது கடினமான வேலை.

கமல் மகள் என்ற முத்திரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும் ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன். நான் அழகாக இருப்பதாக கூறு கிறார்கள்.

என் அழகு ரகசியம் என்பது நிம்மதி யான தூக்கம். நிறைவாக தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும் முகத்தை அடிக்கடி சுத்தம் செய் வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன்.

சீனியும் சேர்க்க மாட்டேன். தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத், படங்களில் என் தந்தை நடித்துள்ளார். என்னை வைத்து ஒரு படம் இயக்க அவர் விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார்.

தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் சொல்வது இல்லை

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: