சிக்கு புக்கு மொக்கை படமா…நல்ல படமா…

விளம்பரங்கள்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

நல்ல படம்ங்கிறது பத்திரிகைகளும் பார்க்கிறவங்களும் பாராட்டுறதுல இல்ல… வருகிற கலெக்க்ஷனிலதான் இருக்கு என்பதை நிருபித்திருக்கிறது ‘சிக்குபுக்கு’. மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் வழங்கும் மெஜஸ்டிக் மல்டிமீடியா லிமிடெட் தயாரித்துள்ள “சிக்கு புக்கு” திரைப்படம் டிசம்பர் 3 அன்று உலகம் முழுவதும் வெளியாகி அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள சென்ற வாரம் பாக்ஸ் ஆபீஸில் சிக்கு புக்கு நெ.1 இடத்தைப் பிடித்துள்ளது. பிரம்மாண்டமாக வெளியான சிக்குபுக்கு அனைத்து படங்களையும் மீறி முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் வாரத்தில் பெற்ற கெலெக்க்ஷனை விட இரண்டாம் வாரம் இரட்டிப்பாகப் பெற்று சினிமா ஆர்வலர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இளைஞர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் கவரக்கூடிய வகையில் குடும்பத்துடன் அமர்ந்துப் பார்க்கக்கூடிய கண்ணியமான திரைக்கதை, மனதைத் கவரும் காட்சியமைப்பு, உற்சாகமான பாடல்கள், பலமான பின்னணி இசை, அதிரடியான சந்தானத்தின் காமெடி மற்றும் விறுவிறுப்பை ஏற்றிச் செல்லும் கிளைமாக்ஸ் ஆகியவையே இவ்வெற்றிக்குக் காரணம். அடுத்தடுத்த இரண்டு மெகா வெற்றிகளைக் கொடுத்த ஆர்யாவிற்கு இப்படம் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: