என்ன ஆச்சு மீனாட்சி…

விளம்பரங்கள்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

தமிழில் அகம் புறம்,மந்திரப்புன்னகை ஆகிய படங்களில் நடித்து முடித்த பிறகு கோலிவுட்டில் பெரிய அளவில் வாய்ப்பு குவியும் என எதிர்பார்த்தாராம் மீனாட்சி. உடல் எடையை குறைத்தல், புது வாய்ப்புகளை நோக்கி காய் நகர்தல் என்று புத்தாண்டு தினத்திலிருந்து முடிவெடுப்பதற்கு பதிலாக, ‘விலங்கு, பறவைகளை அடிச்சு சாப்பிட மாட்டேன். என் பசிக்கு இனி சைவ உணவுகளை மட்டுமே தேடுவேன் என்று தீர்மானித்துள்ளாராம்.

கடந்த சில ஆண்டுகளாக ‘நான்-வெஜ்’ ஐட்டங்களை பொளந்து கட்டினேன். இந்த புத்தாண்டிலிருந்து பச்சை காய் கறிகள் மேல் பாசத்தை காட்டுவேன். விரும்பி சாப்பிட்டு, பசியாறுவேன். அசைவம் பக்கம் எட்டிப்பார்க்க மாட்டேன். சைவ உணவு வகைகள் தான் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை தரும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

என் பசிக்கு பறவைகள், விலங்குகளை பலியாக்க மாட்டேன். அழகிய பறவைகளை வீட்டில் ஆசையாக வளர்த்து அழகு பார்க்கப்போறேன். மனதுக்கு இதம் தரும் பக்தி பஜன் பாடல்களை போட்டு, இரவு நேரத்தில் படுக்கை அறையிலும் கூட பஜனை பண்ணுகிறேன்’ என்கிறார். இறை பக்தியும், ஆன்மீக தேடலும் மீனாட்சியை இப்படியெல்லாம் மாற்றியுள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: