த்ரிஷாவிற்கும் நீதி கட்சிக்கும் என்ன சம்பந்தம்….

விளம்பரங்கள்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

‘அம்பு’ செய்தது மாயமா? காயமா? என்ற பட்டிமன்றம் கமல் ரசிகர்களிடையே பட்டிமன்றமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிக சந்தோஷத்தில் மிதக்கிறார் த்ரிஷா. வழக்கமாக கமல் பட ஹீரோயின்களுக்கு நாலு டூயட்டை தாண்டி அதிக வேலை கொடுக்க மாட்டார்கள். இந்த படத்தை பொறுத்தவரை கமலுக்கு இணையாக பேசப்பட்டிருக்கிறார் த்ரிஷாவும்.

எப்போதும் தான் நடித்த படத்தை பார்க்க ப்ரிவியூ தியேட்டர்களுக்கு தன் அம்மாவோடு வருவார். படத்தை பார்த்துவிட்டு எல்லாருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். ஆனால் அம்புவை பொறுத்தவரை இவரது அக்கறையில் சில ஸ்டெப்புகள் ஏற்றம். தானே ஒரு படப்பெட்டியை வாங்கி தனது நண்பர்களுக்கும் சொந்தக்களுக்கும் திரையிட்டார்.

இந்த சிறப்பு காட்சிக்கு யார் யாரோ அழைக்கப்பட்டிருந்தாலும், நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அழைக்கப்பட்டிருந்ததுதான் பலரையும் கவனிக்க வைத்தது. இதிலென்ன கோணல் பார்வை வேண்டிக் கிடக்கு? இவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில்தான் த்ரிஷாவின் அப்பா மேனேஜராக இருந்தார். இந்த பழக்கத்தில் அழைத்திருக்கலாம் என்று பதில் வருகிறது த்ரிஷா தரப்பிலிருந்து.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: