திரையுலகம் மிர்ச்சி சிவாவின் நம்பிக்கை…

மிர்ச்சி சிவாவின் நம்பிக்கை…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

சோலோ ஹீரோவாக நடித்த முதல் படம் சூப்பர் ஹிட். இரண்டாவது படமான வ குவாட்டர் கட்டிங் படு பிளாப். இந்நிலை‌யில் மூன்றாவது படம் கை கொடுக்கும் என நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளார் சிவா.

16 என்று பெயர் வைத்திருக்கும் இந்தப் படத்தை எஸ்.டி.சபா என்று அறியப்பட்ட சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கியுள்ளார். இசை யுவன் ஷங்கர் ராஜா. படத்தில் 16 லிருந்து 25 வயது வரையிலான காதலை சொல்லியிருக்கிறார்களாம். சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.

தயா‌ரிப்பாளர் தாணு, லிங்குசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். எல்லோரும் விரும்பக்கூடிய காதல் கதை என்பதால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளார் சிவா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.