அரசியல்,முதன்மை செய்திகள் காங்கிரசை போல் பிஜேபி நீரா ராடியாவிடம் சிக்கவில்லை

காங்கிரசை போல் பிஜேபி நீரா ராடியாவிடம் சிக்கவில்லை

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

காங்கிரஸ் தலைமையில் கடந்த ஆண்டு மந்திரிசபை அமைந்தபோது, இலாகா ஒதுக்கீட்டில் அரசியல் தரகர் நீரா ராடியா தலையிட்டு முக்கிய முடிவுகள் எடுத்தார். அவரது டெலிபோன் உரையாடல் பதிவுகள் மூலம் இது உறுதியானது. இது காங்கிரஸ் தலைவர்களை நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது.
நீரா ராடியா விவகாரத்தால் காங்கிரசின் இமேஜ் சரிந்துள்ளது. எனவே நீரா ராடியாவுக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர்.

பாரதீய ஜனதா ஆட்சியின் போது சிவில் விமான போக்குவரத்து மந்திரியாக இருந்த அனந்தகுமாருக்கும், ராடியாவுக்கும் தொடர்பு இருந்தது. எனவே ஊழலுக்கு எதிராக போராடி வரும் பா.ஜ.க.வினர் அனந்தகுமார் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவார்களா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி கூறினார்.

ஆனால் நீரா ராடியாவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் யாரும் சாதகமாக செயல்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நீரா ராடியா சொந்தமாக கிரவுன் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டார். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் அவருக்கு லைசென்சு கொடுக்கவில்லை.

இதையடுத்து நீரா ராடியா மோடிலுப்ட்ஸ் விமான நிறுவனத்தின் ஆலோசகராக சேர்ந்தார். அப்போது 1998- 99-ம் ஆண்டுக்கு அந்த விமான நிறுவனத்துக்கு ரூ.12 கோடி வரி நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வரியை மோடி லுப்ட்ஸ் நிறுவனம் செலுத்த வில்லை. இதனால் சுங்க அதிகாரிகள் மோடி லுப்ட்ஸ் விமானத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த 12 கோடி ரூபாய் வரியை தவிர்க்க செய்ய நீரா ராடியா பல வழிகளில் முயன்றார். அப்போதைய பா.ஜ.க. நிதி மந்திரி யஷ்வந்த் சின்காவை நேரில் சந்தித்து பேசினர்.

ஆனால் நீரா ராடியாவின் பேச்சில், பா.ஜ.க. தலைவர் யஷ்வந்த் சின்கா மயங்கி விடவில்லை. நீராராடியாவுக்கு சாதகமாக செயல்பட மறுத்து விட்டார்.

ரூ.12 கோடி வரியை கட்டியே தீர வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக சட்ட அமைச்ச கத்திடம் ஆலோசனை கேட்டார். இதன் மூலம் பா.ஜ.க. மந்திரிகள் தன்னிச் சையாக செயல்படாதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி