திரையுலகம் ஒரே அமுக்காக ‘கோ’ படத்தை அமுக்கிய ரெட் ஜெயண்ட்

ஒரே அமுக்காக ‘கோ’ படத்தை அமுக்கிய ரெட் ஜெயண்ட்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

நல்லா ஓடுற படம்னு தெரிஞ்சா அந்தப் படத்தை கோழி அமுக்குற மாதிரி ஒரே அமுக்கா அமுக்குறதை தன் பாலிஸியாக வைத்திருக்கிறது ரெட் ஜெயண்ட். அவர்கள் நினைப்பது போலவே வாங்கி ரிலீஸ் செய்யும் படங்களும் தொடர்ந்து ஹிட் லிஸ்டில் சேர்ந்து வருகின்றன. இப்போது இவர்கள் ஒரே அமுக்காக அமுக்கியிருக்கும் படம் ‘கோ’. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏற்கனவே கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் ரெட்ஜெயண்ட் இந்தப் படத்தை வாங்கியிருப்பதால் ‘படத்தில அப்போ ஏதோ விஷயம் இருக்கு…’ என்று சினிமா ரசிகர்களை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தப் படம். ஏற்கனவே கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ‘அயன்’ படத்தை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் செமயாக கல்லா கட்டியது. ‘கோ’வின் கலெக்க்ஷன் ‘அயன்’ கலெக்க்ஷனை முறியடிக்கப் போகிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி