திரையுலகம் ராகுல் காந்தியின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டு விட்டேன் – கவர்ச்சி புயல் பாபிலோனா

ராகுல் காந்தியின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டு விட்டேன் – கவர்ச்சி புயல் பாபிலோனா

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

ராகுல் காந்தியின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டு விட்டேன். எனவே விரைவில் காங்கிரஸில் சேருவேன், சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்காக தீவிரமாகப் பிரசாரம் செய்யப் போகிறேன் என்று அதிரடி ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார் கவர்ச்சி ‘குண்டு’ பாபிலோனா.

பாபிலோனாவின் பிளட்டில் அரசியல் ரத்தம் கலப்பது இது புதிதல்ல. ஏற்கனவே அவரது பெரியம்மாவான முன்னாள் கவர்ச்சி ‘பிரளயம்’ மாயா காங்கிரஸில்தான் இருக்கிறார் (ஆனால் யாரும் அவரை பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாகத் தெரியவில்லை). இந்த வரிசையில் தற்போது தனது பெரியம்மாவின் ஆசியுடன் அரசியல் களத்தில் குதிக்கப் போகிறாராம், கவர்ச்சி சினிமாவில் மூழ்கித் திளைத்த பாபிலோனா.

அடிக்கடி மாயாவும், அவரது மகன் விக்கியும் அக்கம் பக்கத்து ஆட்களிடம் சண்டை போடுவதும், கைதாவதும், போலீஸ் நிலையத்திற்கு அலைவதுமாக உள்ளனர். இவர்கள் மீது இல்லாத புகார்களே அப்பகுதியில் கிடையாது.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் பாபிலோனா தொடர்ந்து கவர்ச்சிகரமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது அரசியல் களம் புகுந்து அனல் பறப்ப தயாராகி விட்டாராம் பாபிலோனா.

ஏன் இந்த திடீர் ஆசை என்று பாபியிடம் கேட்டால், ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணங்களில் அவர் பேசிய பேச்சுக்கள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டன என்கிறார் பாபி.

தொடர்ந்து அவர் கூறுகையில், எனது பாட்டி மற்றும் பெரியம்மா நடிகை மாயா போன்றோரெல்லாம் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வளர்ந்ததும் எனக்கும் அரசியல் ஆர்வம் வந்தது. காங்கிரசில் சேரலாம் என முடிவு செய்தேன்.

என் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் என்பதால் அந்த கட்சியை தேர்வு செய்தேன்.

ராகுல் காந்திய மனதில் பட்டதை அப்படியே பேசுகிறார். அவரது பேச்சுக்களால் நான் ஈர்ப்பாகி விட்டேன். கையில் தற்போது சில படங்கள் உள்ளன. அதை முடித்து விட்டு காங்கிரஸில் சேர்ந்து விடுவேன்.

பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். அரசியல் என்பது மக்களுக்கு சமூக பணிகள் செய்ய நல்ல களம். எனவேதான் காங்கிரஸ் கட்சிக்கு போகிறேன். சட்டசபைத் தேர்தலிலும் பிரசாரம் செய்வேன் என்று கூறி நிறுத்தினார் பாபி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி