திரையுலகம் ‘காதல் கொண்டேன்’ மேக்னாவுக்கு ‘டிப்ஸ்’ தருவது யார்…

‘காதல் கொண்டேன்’ மேக்னாவுக்கு ‘டிப்ஸ்’ தருவது யார்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமானார் நடிகை மேக்னா ராஜ்.
அந்த படம் பாக்ஸ் ஆபிசில் சுமாராக போனாலும், கிருஸ்னலீலை படம் கை கொடுக்கும் என நம்பியிருக்கிறாராம்.

கள்ள சிரிப்பழகா படம், உயர்திரு போர்ட்வென்டி,நந்தா நந்திதா ஆகிய மூன்று படங்களிலும் சக்தி,சினேகன், ஹேமசந்திரன் ஹீரோக்களுடன் நடிக்கிறார்.

இந்த படங்களில் ஸ்டைலிஸ் கன்சல்டன்ட், பொறுப்பான மிடில் கிளாஸ் பொண்ணு,மெடிகல் மாணவி, ரவுடியை காதலிக்கும் ஹீரோயின் ரோல் என செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன்.

வித்தியாசமான ரோல்களில் நடிக்கவும் தயக்கம் காட்டமாட்டேன். மலையாள படங்களிலும் நடிக்கிறேன். மம்மூட்டி போன்ற நடிகருடன் நடித்து எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

தமிழில் நான் நடித்து வெளியான முதல் படம் சரியாக போகவில்லை என்றாலும் கோடம்பாக்கம் என்னை வரவேற்றது. என் பெற்றோர் சினிமாவில் இருந்தவர்கள் என்பதால் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். நடிப்பு பெட்டராக வர கடுமையாக உழைக்கிறேன்.

நான் நன்றாக கேமரா முன் நடிக்க அம்மா-அப்பா இருவரும் ‘டிப்ஸ்’கொடுத்து’ உற்சாகப்படுத்துவதால் வித்தியாசமான நடிப்பை காட்ட முடிவதாக நம்புகிறேன் என்று பேசியுள்ளார் மேக்னா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி