அரசியல் காங்கிரஸின் இரட்டை வேடம் தாங்காமல் எகிறும் மமதா…

காங்கிரஸின் இரட்டை வேடம் தாங்காமல் எகிறும் மமதா…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

மாவோயிஸ்ட்களை அடக்க வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை தவறாக பயன்படுத்தப்படுவதை மத்திய அரசு கண்டிக்காவிட்டால் பதவியை தூக்கி எறிவேன். வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் அவசியமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயார் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளை அடக்க மத்திய படை வந்தது. ஆனால் இங்கிருக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் அதை எங்கள் கட்சியினருக்கு எதிராக தவறாக பயன்படுத்துகின்றனர். இதனால் எங்கள் கட்சித் தொண்டர்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததிலிருந்து தற்போது வரை எங்கள் கட்சி தொண்டர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் மத்திய படையால் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய படையை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை என்னால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

இது குறித்து நான் பிரதமரையும், சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து புகார் அளித்தேன். என் கட்சித் தொண்டர்கள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை 20 முறை சந்தித்து புகார் கொடுத்துள்ளனர். மேலும், மேற்கு வங்க மாநில ஆளுநர் எம்.கே. நாராயணனும் இது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இத்தனை பேர் முயற்சியும் வீனாகப்போனது.

இதே நிலை தொடரும் பட்சத்தில் நான் என் அமைச்சர் பதவியைத் தூக்கி எறியப் போகிறேன். மேலும், வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் அவசியமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயார் என்று அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி