திரையுலகம் நதியாவை கழட்டி விட்ட ஜாக்பாட்…

நதியாவை கழட்டி விட்ட ஜாக்பாட்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

எண்ணி மூணே மாசம், எங்கேயோ போகப்போவுது ரேட்டிங் என்றுதான் நினைத்திருந்தார்கள் ஜெயா டி.வியில். ஆனால் குஷ்பு இடத்தை நிரப்ப வந்த நதியாவால், ஒரு ஓடையாக கூட நடை பழக முடியவில்லை ஜனங்களின் மனங்களுக்குள்! ஜாக்பாட் நிகழ்ச்சியை குஷ்பு நடத்திக் கொண்டிருந்தபோது இருந்த மார்க்கெட்டிங் நிலவரம், நதியா வந்தபின் நங்கூரம் போட்ட மாதிரி ஆகிவிட்டதாம்.

நதியா நன்றாக தமிழ் பேசுவது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் குஷ்புவிடம் இருக்கிற ‘குளறல் தமிழ்’ நதியாவிடம் இல்லை. இப்படியெல்லாம் பேசினால் யாருக்குதான் பிடிக்கும்? அதனால் வருகிற ஜனவரியில் இருந்து நதியாவுக்கு பதிலாக நமீதாவை ஒப்பந்தம் செய்துவிட்டதாம் ஜெயா டி.வி.

பார் போற்றும் ‘மச்சான்ஸ்’ தமிழை இனி வாரந்தோறும் ஜெயா டி.வி யில் கேட்கும் பாக்கியம் தமிழ் ஜனங்களுக்கு வாய்க்கப் போகிறது. கலைஞர் டி.வியில் மானாட மயிலாட, கலைஞரின் வசனத்தில் உருவாகும் இளைஞன் படத்தில் முக்கிய ரோல். இப்படி நமீதாவுக்கும் திமுக வுக்கும் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறதே என்ற முணுமுணுப்பு சராசரி ரசிகர்களிடம் இருக்கிறது. இதையெல்லாம் ஜாக்பாட் சரி செய்யும் என்பதும் நமீதா ஒப்புக் கொண்டதற்கு உடனடி காரணமாக இருக்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி