திரையுலகம்,முதன்மை செய்திகள் உதயநிதிக்காக கமல் அந்தர் பல்டி…

உதயநிதிக்காக கமல் அந்தர் பல்டி…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

மன்மதன் அம்பு படத்தில் இடம்பெறும் கண்ணோடு கண் கலாந்தாளென்றால் பாடல் நீக்கப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதிய பாடல் வரிகள் இந்துக்களின் மனதைப் புண்படுத்தக்கூடியதாக உள்ளது என்ற சேதி பரவலாகக் கிளம்பியதை நான் அறிவேன்.

இந்தப் பாடல் வரிகள் சென்சாரால் அனுமதிக்கப்பட்டு, விஜய் டிவியில் மூன்று முறை ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது எனது சொந்ததப் படமாக இருந்திருந்தால், கண்டிப்பாய், அந்த வரிகளை நிஜ ஆன்மீக வாதிகளைப் புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் சென்சார் சான்றிதழோடு வெளியிட்டிருப்பேன்.

இது ரெட்ஜெயன்ட் படம். உதயநிதி ஸ்டாலினின் படம். எல்லோரும், எம்மதத்தவரும் படம் பார்க்க வரவேண்டும் என்ற நோக்கத்தில், பல கோடி பேர் ஏற்கனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும்,இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் சைவரும், வைணவரும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் உள்ளனர். அவர்கள் என்னைப் போல் அல்ல.. தெய்வ விசுவாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அவ்வாறாகவே இருந்து வருகிறது, அதுவாகவே திகழும்.

மன்மதன் அம்பு வியாபாரம். அதுவும் மற்றவர்கள் செய்வது. நான் அதில் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடையூறு எனக்குப் புதிதல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல்ல ரசனை பலியாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றபடி பகுத்தறிவுப் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மன்மதன் அம்பு படத்தின் விளம்பரத்துக்காக நேற்று கொச்சிக்கு வந்தார் கமல்ஹாஸன். அவருடன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் உதயநிதி ஆகியோரும் வந்தனர்.

அப்போது நிருபர்களிடம் பேசிய கமல்ஹாஸனிடம், படத்தில் இடம்பெறும் ‘கண்ணோடு கண்ணை கலந்தால்’ என்ற பாடலில் இடம்பெறும் வரிகள் ஆபாசமாக இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. இந்தப் பாட்டை நீக்குவீர்களா என்றும் நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கமல், “அந்தப் பாட்டு இந்துக் கடவுள்களுக்கு எதிரானதல்ல. அப்படி எதையும் நான் எழுதவும் இல்லை. இன்னொன்று இந்தப் பாடலுக்கு சென்சார் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதிலிருந்தே தெரியவில்லையா? எனவே யாருக்காகவும் அந்தப் பாடலை நீக்க வேண்டிய அவசியமில்லை”, என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி