2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வீண் சவடால் விடும் கனிமொழி…

விளம்பரங்கள்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் திமுகவினரும் சுத்தமானவர்கள் என்பதை நிரூபிக்க சிபிஐ சோதனை ஒரு வாய்ப்பாக அமையும். நாங்கள் ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபி்ப்போம் என்று கூறியுள்ளார் திமுக எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ நடத்தி வரும் அதிரடி ரெய்டுகள் குறித்து கனிமொழி கருத்து தெரிவிக்கையில், சட்டம் தனது கடமையைச் செய்கிறது. மேலும் இதன் மூலம் ஒருவர் தான் நிரபராதி என்பதையும் நிரூபிக்க முடியும். நாங்கள் சுத்தமானவர்கள், என்பதை நிச்சயம் நாங்கள் நிரூபிப்போம்.

தற்போதைய விசாரணையை நாங்கள் (திமுக) முழுமையாக வரவேற்கிறோம். இதன் மூலம்தான் எங்களை நிரபராதி என்று நிரூபிக்க முடியும்.

இந்த சோதனையால் திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் எந்த விரிசலும், பிளவும் ஏற்படாது. சிபிஐ சோதனையால் இரு கட்சிகளுக்கு இடையிலான உறவு எப்படி பாதிக்க முடியும். நிச்சயம் அதில் எந்தப் பாதிப்பும் வராது.

திமுகவைக் குறி வைத்து சிபிஐ சோதனை நடத்தப்படவில்லை என்றார் கனிமொழி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: