அரசியல்,முதன்மை செய்திகள் அமெரிக்காவிற்கு பெரிய ஆப்பு அடித்த விக்கிலீக்ஸ் அதிபர் விடுதலையானார்…

அமெரிக்காவிற்கு பெரிய ஆப்பு அடித்த விக்கிலீக்ஸ் அதிபர் விடுதலையானார்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

லண்டன் கடும் இழுபறிக்குப் பின்னர் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரது ஜாமீனை எதிர்த்து ஸ்வீடன் அரசு தொடர்ந்த அப்பீல் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. நேற்று அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஸ்வீடனில் தொடரப்பட்ட கற்பழிப்பு வழக்கு தொடர்பாக லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் அசாஞ்சே. உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கான நடைமுறைகளும் தொடங்கின. இந்த நிலையில் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்தார் அசாஞ்சே. அதை விசாரித்த லண்டன் உயர்நீதிமன்றமும் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை அளித்தது. ஆனால் ஜாமீனை எதிர்த்து ஸ்வீடன்அரசு தரப்பில் அப்பீல் செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அசாஞ்சே சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போது ஸ்வீடன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார். இதையடுத்து அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டார்.

லண்டன் சிறையில் 9 நாட்கள் அடைபட்டிருந்தார் அசாஞ்சே. வெளியில் வந்த அசாஞ்சேவை ஏராளமான பத்திரிக்கையாளர்கள், ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் தனது ஜாமீன் உத்தரவை உயர்த்திக் காட்டியபடி போஸ் கொடுத்தார் அசாஞ்சே. லண்டன் காற்றை மீண்டும் சுவாசிப்பது அருமையானது என்று அப்போது தெரிவித்தார் அசாஞ்சே.

தொடர்ந்து அவர் பேசுகையில், உலகெங்கும் ஏராளமான பேர் எனக்காக குரல் கொடுத்துள்ளனர். எனக்காக போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன். எனது தரப்பு நியாயத்தை நான் சட்டப்பூர்வமாக நிரூபிப்பேன். நான் நிரபராதி என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப் போகிறேன் என்றார்.

அசாஞ்சே 2,50,000 பவுண்டு ரொக்க ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, குறிப்பிட்ட பகுதியில்தான் தங்கியிருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், தினசரி உள்ளூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவருடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க அவரது உடலில் மின்னணு கருவி ஒன்றையும் பொருத்தியுள்ளனர்.

அசாஞ்சேவுக்கான ரொக்க ஜாமீனுக்கான பணத்தை அவரது ஆதரவாளர்களே திரட்டிக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பலர் பிரபலங்கள் ஆவர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி