என்ன நடக்கிறது இந்த உலகில்…ஏன் இந்த பச்சை துரோகங்கள்…

விளம்பரங்கள்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

ஐ.நா.நிபுணர் குழுவுக்கு அனுப்பப்பட்ட சாட்சியங்கள் திருப்பியனுப்பப்பட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நிபுணர் குழு அக்கறையின்றி இருக்கிறதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.

ஐ.நா நிபுணர் குழுவுக்கு சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை கடந்த 15ம் திகதியுடன் முடிவுற்றது. ஆயினும் இந்தக் கால எல்லை மேலும் நீடிக்கப்படும் என்று என்று ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளர் பர்கான் ஹக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழுவுக்கு சாட்சியங்களை அனுப்புவதற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த 15ம் திகதி நண்பகல் இன்னர் சிற்றி பிரஸ் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று நிபுணர் குழுவிடம் சேராமல் திரும்பியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் மறுநாள் அதிவிரைவு பொதி விநியோக சேவை மூலம் சாட்சியங்களை ஐ.நாவின் முகவரிக்கு அனுப்பிய போதும் அதைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு யாரும் இல்லை என்று திருப்பி அனுப்ப்ப்பட்டுள்ளதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் நிபுணர் குழு அக்கறையின்றி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள இன்னர் சிற்றி பிரஸ், மின்னஞ்சலின் உள்ளக இடவசதி நிரம்பியதால் மின்னஞ்சல் திரும்பியிருந்தாலும் அதிவிரைவுப் பொதி விநியோக சேவையின் ஊடாக அனுப்பிய சாட்சியங்களும் திரும்பியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வரைக்கும் ஐ.நா நிபுணர் குழுவுக்கு 1100 சாட்சியங்கள் கிடைத்துள்ளன. ஆயினும் எத்தனை நிராகரிக்கப்பட்டன அல்லது திரும்பின என்பது கவனிப்புக்குரிய விடயம் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: