‘127 ஹவர்ஸ்’ மீண்டும் ஆஸ்கார் விருதை நோக்கி ஏ.ஆர்.ரஹ்மான்

விளம்பரங்கள்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், 2வது முறையாக கோல்டன் குளோப் விருதைப் பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திற்காக, கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்லம்டாக் படத்திற்காக ஒரிஜினல் இசைப் பிரிவில் கோல்டன் குளோப் விருதைப் பெற்றவர் ரஹ்மான். தற்போது மீண்டும் ஒரிஜினல் இசைப் பிரிவில் 127 ஹவர்ஸ் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ரஹ்மான்.

44 வயதான ரஹ்மான், ஸ்லம்டாக் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர் என்பது நினைவிருக்கலாம்.ஜேம்ஸ் பிரான்கோ ஹீரோவாக நடித்துள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஹ்மானின் இசையும் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. எனவே ரஹ்மான் மீண்டும் கோல்டன்குளோப் விருதைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது.ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் ஒரிஜினல் இசைக்கான போட்டிப் பிரிவில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: