தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு சுந்தர்.சியிடம் இருந்து இனிப்பான செய்தி

விளம்பரங்கள்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

சுந்தர்.சி-யின் சமீபத்திய படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, மீண்டும் டைரக்டர் பணியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். உள்ளத்தை அளித்தா, அன்பேசிவம், வின்னர், கிரி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. கமல், அர்ஜூன், மாதவன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் இயக்கிய சுந்தர்.சி, தலைநகரம் படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். தலைநகரம் படத்தின் வெற்றி அவரை நடிப்பில் கவனம் செலுத்த வைத்தது.

அதனைத்தொடர்ந்து வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், வாடா, குருசிஷ்யன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஒருசில படங்கள் வெற்றி பெற்றன. ஆனால சமீபத்திய இவரது படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, மீண்டும் டைரக்ஷன் பணியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி குஷ்புவும் ஓ.கே.சொல்லியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: