“நீச்சல் உடையில் நடிக்க நான் தயார்” அறைகூவல் விடும் நடிகை

விளம்பரங்கள்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

“நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். அதற்குப் பொருத்தமான கதை, காட்சி இருந்தால். இயக்குநர்கள் தயாராக இருந்தால் சரி”, என்கிறார் ஸ்ரேயா.

தமிழில் ஸ்ரேயாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் சில படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் ஹைதராபாதில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், “ரசிகர்கள் விருப்பப்படி நடிப்பதுதான் நடிகைகள் கடமை. எனக்கு அழகு இருக்கிறது. அதன் மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். உடம்பை முழுமையாக மூடிக்கொண்டு நடித்தால் ரசிகர்களுக்கு எரிச்சல் வந்து விடும்.

எனவே அவர்களுக்காக கவர்ச்சியாக நடிக்கிறேன். சில நடிகைகள் நீச்சல் உடையில் நடிக்கின்றனர். நானும் அது போல் நீச்சல் உடையில் நடிக்கத் தயார். ஆனால் அது போன்ற கதைகள் இன்னும் வரவில்லை.

பொது விழாக்களில் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொள்வதை சிலர் விமர்சிக்கின்றனர். அப்படி வருவதில் எந்தத் தவறும் இல்லை.

காதல் மனித வாழ்க்கையில் ஒரு அங்கம். எனக்கு யார் மீதும் இன்னும் காதல் வரவில்லை. ஆனால் சினிமா மேல் அளவு மீறிய காதல் எனக்கு இருக்கிறது. படப்பிடிப்பு என்றால் சந்தோஷமாக ஓடுகிறேன். மழை, வெயில் பற்றிக்கூட கவலைப்படாமல் நடிக்கிறேன். வாழ்க்கையில் எனக்கு சலிப்பே வராத விஷயம் சினிமா”, என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: