நித்தியானந்தாவுடன் இருப்பது ரஞ்சிதா – கர்நாடக போலீஸ் கண்டுபிடுப்பு

விளம்பரங்கள்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

Tamil, Tamil News,Tamil News paper,   Tamil Newspaper, Tamil daily news paper,   Tamil daily newspaper,Tamilnadu   politics,kollywood,Tamil Cinema

நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா படுக்கை அறைக் காட்சிகள் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிக்கையை கர்நாடக சிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.அதில் இருப்பது நித்தியானந்தா, ரஞ்சிதாதான் என்றும் போலீஸ் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஒருவருடன் நித்தியானந்தா அந்தரங்கமாக இருக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி தமிழகத்தையும்,நாட்டையும் உலுக்கியது. பின்னர் அந்த நடிகை ரஞ்சிதா என்று கூறப்பட்டது. ஆனால் நித்தியானந்தா தரப்பு மறுத்தது. அது ஒரு ஜோடிக்கப்பட்ட வீடியோ என்று அவர்கள் வர்ணித்தனர். அதேசமயம் நித்தியானந்தாவும் தலைமறைவாகி விட்டார்.

அவரை கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தேடி இமாச்சல் பிரதேசத்தில் வைத்து கண்டுபிடித்து கைது செய்தது கர்நாடக சிஐடி போலீஸ். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

இந்த வழக்கு ராம்நகர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் தற்போது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது போலீஸ். அதில், நித்தியானந்தா மீது சரமாரியாக புகார் கூறப்பட்டுள்ளது.

மேலும், நித்தியானந்தா, ரஞ்சிதாதான் வீடியோவில் உள்ளனர் என்றும் ஆதாரத்துடன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுபோக ஒரு பெண்ணின் பரபரப்புப் புகார் வாக்குமூலத்தையும் போலீஸார் இணைத்துள்ளனர். இது மட்டும் 27 பக்கங்கள் உள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கும் சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: