திரையுலகம் நான் தனுஷோட விசிறி – இயக்குனர் மகேந்திரன்

நான் தனுஷோட விசிறி – இயக்குனர் மகேந்திரன்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

உத்தமபுத்திரன்’ ஒரு ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகி இப்போது எல்லோரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நான் நடித்த ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’ போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர். ஜவகர்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். எனக்கும் இயக்குநர் மித்ரன் ஜவகருக்கும் எட்டு வருட நட்பு இருக்கு. எங்களுக்குள் முதலில் நட்பு; அப்புறம்தான் சினிமா. அவர் அண்ணன் செல்வராகவனிடம் சில படங்களில் அசிஸ்டெண்டாக வேலை செய்திருக்கிறார்.

அப்போதும் சரி, இந்த மூன்று படங்களை இயக்கிய பின்பும் சரி, இதுவரை எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. நான் எதை எதிர்பார்க்கிறேனோ அதே மாதிரி படத்தை எடுத்து கொடுத்திடுவார்.

‘உத்தமபுத்திரன்’ பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மகேந்திரன் உங்கள் நடிப்பைப் புகழ்ந்து பாராட்டினாரே?

இப்படி பெரியவங்க பாராட்டும் போதெல்லாம் மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். வானத்தில் பறக்கிற மாதிரி இருக்கும். ஆனால் மகேந்திரன் சார் பாராட்டியபோது நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். சொல்லப் போனால் எனக்கு அழுகையே வந்துவிட்டது. அவர் பெரிய லெஜண்ட்! இன்றைக்கு யதார்த்த படங்கள் ஓடிக்கிட்டு இருக்குன்னா அதுக்கெல்லாம் காரணம் மகேந்திரன் சாரைப் போன்ற முன்னோடிகள்தான்.
அவருடைய கண் பார்வையில் நான் இருக்கேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கு. அவர் மேடையில், ‘நான் தனுஷோட விசிறி’ என்று சொன்னதும் என் கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு. அப்போ என்ன பேசுறதுன்னே எனக்குத் தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது.

பாலுமகேந்திரா இயக்கத்தில் நடித்த நீங்கள் அதன் பிறகு பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்கவில்லையே?

பண்ணக்கூடாதுன்னு எந்த முடிவும் இல்லை. அதுக்கான நல்ல வாய்ப்புகள் அமையவில்லை என்பதுதான் உண்மை. அது மட்டுமில்லாமல் வரிசையாக நான் படங்களை கமிட் பண்ணுவதால் யாரும் என்னை நடிக்க வைக்க முயற்சி பண்ணுவதில்லை என்று நினைக்கிறேன். நல்ல கதையுடன் வந்தால் நான் நடிக்க ரெடியாகத்தான் இருக்கேன்.

தொடர்ந்து ரீ-மேக் படங்களில் நடிப்பது ஏன்?

நேரடி படங்கள் பண்ணக்கூடாதுன்னு எந்தக் கொள்கையும் இல்லை. ஆனால் என்னை சுத்திச் சுத்தி ரீ-மேக் படங்கள்தான் வருகிறது. என்னை வைத்து படம் பண்ண வர்றவங்க எல்லாம், “அந்தப் படத்தைப் பாருங்க, அந்தக் கதை உங்களுக்கு ரொம்பவும் செட் ஆகும்”ன்னு சொல்லி ஒவ்வொரு படத்தை பார்க்க வைக்கிறாங்க.

அந்தப் படங்களை பார்க்கும்போது எனக்கும் தோன்றும் இதை நாம பண்ணலாமே என்று! இப்படித்தான் வரிசையா ரீ-மேக் படங்கள் அமைகிறது. ஆனால் எதிர்காலத்தில் ரீ-மேக் படங்களை குறைத்து நேரடி படங்கள் பண்ணுவேன்.

ஒரு தேர்ந்த அனுபவசாலி மாதிரி நடிக்கிறீங்களே! இதற்கு யார் காரணம்?

அதற்கெல்லாம் நான் போயிட்டு வந்த பட்டறைகள்தான் காரணம். நான் ஒரு நடிகனாகணும்னு என்னை வீட்டில் வளர்க்கலை. நான் நடிக்க வந்தது ஒரு விபத்து மாதிரி நடந்ததுதான். என்னை ஒரு நடிகனா பட்டைத் தீட்டியவர்கள் இயக்குநர்கள்தான். ‘நடிப்பு என்பது நடிக்காமல் இருக்கிறது’ என்பதை பாலுமகேந்திரா சார் இயக்கத்தில் நடிக்கும்போதுதான் கத்துக்கிட்டேன். என்னை செதுக்கியது இயக்குநர்கள்தான்

தனுஷுக்குள்ளே ஒரு இயக்குநர் இருப்பாரே! அவர் எப்போது வெளியே வருவார்?

அதுக்கான காலம் இன்னும் வரலை. ஆனால் எனக்கு ஆரம்பத்தில் இயக்குவதில்தான் ஆர்வம் இருந்தது. ஆனால் நடிப்பு என் வாழ்க்கையில் முந்தி விட்டதால் இப்போது அதை சரியாக செய்ய வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறேன்.

இயக்குநர் வேலை என்பது கடினமான வேலை. இயக்குவதை மட்டும் செய்தால் போதாதது. யூனிட்டையும் இயக்க வேண்டும். வரவு, செலவு என எல்லாவற்றையும் தெரிந்து அதற்குத் தகுந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டும். அதுக்கான தகுதி எனக்கு இன்னும் வரவில்லை. வரும்போது இயக்குவேன்.

அழகான கதாநாயகிகளை தேர்வு செய்கிறீர்கள்! அதன் ரகசியம் என்ன?

கதாநாயகிகளைத் தேர்வு செய்வதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. அதை இயக்குநரும், தயாரிப்பாளரும் தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் யார் சரியாக இருப்பாங்களோ, அவர்களைத் தேர்வு செய்து என்னிடம் சொல்லி விடுவார்கள். நானும் சரின்னு சொல்லிடுவேன் அவ்வளவுதான்.

‘உத்தமபுத்திரன்’ படத்தை பொறுத்தவரையில் அதன் ஒரிஜினலில் நடித்த ஜெனிலியாவையே நடிக்க வைக்கலாம் என்பதை இயக்குநர் சொன்னபோது அது சரின்னு எனக்கும் பட்டது. அவ்வளவுதான். அப்படி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தேர்வு செய்யும் கதாநாயகிகள் அழகானவங்களாக அமையுது போலும்!

உங்களுடைய அடுத்த படைப்புகள் என்ன?

‘ஆடுகளம்’. இப்படம், ‘பொல்லாதவன்’, மாதிரியோ ‘புதுப்பேட்டை’ படம் மாதிரியோ இருக்காது. படத்துக்குப் படம் வித்தியாசம் இருக்கணும், கதை ஹீரோவை சுற்றி மட்டுமே இருக்கக் கூடாது, எல்லோரையும் சுத்தி வரணும்னு நினைக்கிறவன் நான். வாழ்க்கை என்பது நான் மட்டும் இல்லையே? என் மனைவி, குழந்தை, நண்பர்கள், வேலை செய்யுற இடம் என எல்லாம் அதில் அடங்கியிருக்கு.

அதுபோன்றுதான் சினிமாவும். அந்த மாதிரி கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன். அது மாதிரியான படம்தான் நான் நடித்து வரும் ‘மாப்பிள்ளை’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அண்ணனுடன் ஒரு படம் பண்றேன். அப்புறம் ஹரி சார் இயக்கத்தில் ‘வேங்கை’ன்னு ஒரு படம் பண்றேன்.

இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாயிட்டீங்க! சினிமா, குடும்பம் இரண்டையும் எப்படி மேனேஜ் பண்றீங்க?

சினிமாவை மட்டும்தான் நான் மேனேஜ் பண்றேன். குடும்பத்தை மனைவி பார்த்துக்கிறாங்க. குடும்பங்கிறது மேனேஜ் பண்ற இடத்துக்கு வந்தால், அந்தக் குடும்பத்தில் சந்தோஷம் இல்லைன்னு அர்த்தம். இப்போதைக்கு என் குடும்பத்தை நான் மேனேஜ் பண்ண வேண்டியதே இல்லை. காரணம் எல்லோரும் சந்தோஷமா இருக்கோம்” என்றவாறு சிரித்த தனுஷின் அந்த சிரிப்பில் எத்தனை அர்த்தங்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி