மந்திரப் புன்னகை – இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பாராட்டு

விளம்பரங்கள்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

தமிழ் சினிமாவில் உருவாகும் சிறந்த படங்களக்கு தம் பாராட்டை சொல்ல இயக்குநர் சிகரம் என்றுமே தவறியதில்லை. அதன்படி கரு.பழனியப்பன் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘மந்திரப் புன்னகை’ படத்தை பார்த்த கே.பாலச்சந்தர், தனது பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

கே.பாலச்சந்தர் கரு.பழனியப்பனுக்கு எழுதியிருக்கும் பாராட்டு கடிதத்தில் “பேரன்புமிக்க கரு.பழனியப்பன் அவர்களுக்கு, தங்களது எழுத்திலும் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்திருக்கிற ‘மந்திரப் புன்னகை’ படம் பார்த்தேன்.

கடந்த தலைமுறைகளில் தடம் தவறிய தாய்க்குலங்களில் சிலர் இருந்திருக்கிறார்கள் என்கிற உண்மையும் இந்தத் தலைமுறையில் தியாக சீலர்கள் சிலரும் இருக்கவே செய்கிறார்கள் என்கிற ஒரு சிந்தையைத் தொட்டிருக்கிறீர்கள்….மிகவும் நாசூக்காக.

இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் மனரீதியான ஒரு சுவாரஸ்யமான கதையை கத்திமேல் வெற்றிகரமாக நடந்து இந்தத் திரைப்படத்தை செதுக்கியிருக்கிறீர்கள். இது ஒரு சாதனையாக எனக்குத்தோன்றியது.

திரைக்கதையின் சஸ்பென்ஸ் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட்டிருப்பது படத்தின் வெற்றிக்கு அடிகோலுகிறது.

எல்லாப் பொறுப்புகளையும் தலை மேல் சுமந்து கொண்டிருக்கும் தங்களின் மிகையில்லாத நடிப்பும் இசையில் வித்தியாசாகரின் பங்கும் நடிகர் சந்தானம் அவர்களின் நடிப்பும் பாராட்டுக்குரியது” என்று கூறியிருக்கிறார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: