இனமான காவலர் கருணாநிதியின் அடுத்த கடிதம்

விளம்பரங்கள்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

இலங்கையில் இந்திய அரசு கட்டும் 50,000 வீடுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடித்து, அவற்றை தமிழர்களுக்கு விரைவாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நாளை இலங்கை செல்கிறார். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டி கொடுக்கும் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

இந் நிலையில் அவருக்கு முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கை செல்லும் நீங்கள் இலங்கை தமிழர்கள் தொடர்பாக சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையில் 30,000 தமிழ் மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டு இருப்பது எனக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நமது வெளிவிவகாரத் துறை செயலாளர் இலங்கை சென்றிருந்த போதும் முகாம்களில் மக்கள் இருந்ததை பார்த்திருக்கிறார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக பலமுறை இலங்கை அரசிடம் சொல்லியும், இதற்கு திருப்தியான தீர்வு காணாதது மிகுந்த வேதனை தருகிறது.

மக்களை மறு குடியமர்த்தல் மற்றும் மறு வாழ்வு திட்டங்கள் இலங்கை அரசால் முழுமையாக செயல்படுத்தபடவில்லை. இதில் இந்திய அரசு பல மாவட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தியும், உரிய முன்னேற்றம் இல்லை.

முகாம்களில் இருந்த 3 லட்சம் தமிழர்களில் பெரும்பாலோர் தங்கள் பூர்வீக இருப்பிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், எனக்குக் கிடைத்த தகவல்படி அவர்கள் இன்னும் பெரும் துன்பத்திலேயே சிக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய நிவாரண பணிகள் செய்யவில்லை. கெளரவமாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கவில்லை.

அவர்களில் அமைதியாக வாழவும், கெளரவத்தோடு வாழவும், உத்தரவாதம் ஏற்படுத்த வரவேண்டும்.

இந்திய அரசு கட்டி கொடுக்கும் 50,000 வீடுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு விரைவாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு, அதிகார பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நீண்ட காலமாக நடந்தும் இன்னும் ஆரம்ப கட்ட நிலையிலேயே இருக்கின்றன.

இந்த பிரச்சனையில் உரிய ஆலோசனைகள் நடத்தி சரியான தீர்வுகள் காண வேண்டும். இதன் மூலம் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைகளையும், நலன்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: