அரசியல்,முதன்மை செய்திகள் தென் கொரியா மீது வட கொரியா பீரங்கித் தாக்குதல் – பதட்டத்தில் உலக தலைவர்கள்

தென் கொரியா மீது வட கொரியா பீரங்கித் தாக்குதல் – பதட்டத்தில் உலக தலைவர்கள்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

தென் கொரியாவில் ஒரு தீவு மீது வட கொரியா பீரங்கித் தாக்குதல் நடத்தியதால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மொத்தம் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட குண்டுகள் வந்து விழுந்தன. இந்த திடீர் தாக்குதல் காரணமாக பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து தென் கொரியா பதில் தாக்குதலில் ஈடுபட்டது.

வடகொரியாவின் தாக்குதலில் 60 முதல் 70 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

இந்த தாக்குதலை தென் கொரியா ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் மேல் விவரங்களை அது வெளியிட மறுத்து விட்டது.

வட கொரியாவின் இந்த திடீர் தாக்குதலால் தென் கொரியாவில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

பங்கு சந்தைகளில் சரிவு:

இந்த தாக்கத்தால் உலக பங்கு சந்தைகளிலும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பல சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையிலும் (நிப்டி) மும்பை பங்குச் சந்தையிலும் (சென்செக்ஸ்) சரிவு ஏற்பட்டது.

மோதலைத் தவிர்க்க முயற்சி-தென் கொரிய அதிபர்

இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரிய அதிபர் லீ மியூங் பாக் கூறுகையில், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பெரிதாக வெடித்து விடாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இருப்பினும் வட கொரியா தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தென் கொரியா எச்சரித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி