அரசியல் ஜெர்மனி நாடாளுமன்றத்தைத் தாக்க அல்கொய்தா திட்டம்!

ஜெர்மனி நாடாளுமன்றத்தைத் தாக்க அல்கொய்தா திட்டம்!

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

அல் கொய்தா தாதா தாவூத் இப்ராகிம் உதவியுடன் ஜெர்மனியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனி நாட்டுப் நாடாளுமன்றத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்க அல் கொய்தா திட்டமிட்டுள்ளதாக அத்தகவல்கள் கூறுகின்றன. தாக்குதலை நடத்த 6 பேர் கொண்ட தீவிரவாதக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பேர் ஏற்கனவே ஜெர்மனி தலைநகர் பெரிலினிலுக்குள் நுழைந்து விட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. இவர்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள்.

இந்த தாக்குதலை நடத்த அல் கொய்தா தாதா தாவூத் இப்ராகிமின் உதவியை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து ஜெர்மனியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம், வரலாற்று சிறப்புமிக்க ரீங்காக் கட்டிடம், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வர்த்தக மையங்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் லிங்பனில் நடந்த நேடோ நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தீவிரவாதிகளை எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் நலனுக்கு எதிராக நடத்தப்படும் எந்த தீவிரவாத தாக்குதல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி