பேஸ்புக்கில் சிக்கியதால் தத்துவம் பேசும் மனீஷா கொய்ராலா

விளம்பரங்கள்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

‘விவாகரத்து கிடைத்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்’, என்று தனது ஆசையை பேஸ்புக்கில் தெரிவித்த நடிகை மனீஷா கொய்ராலா, அடுத்த சில நிமிடங்களில் அதை அழித்துவிட்டார்.

ஐந்து மாதங்களுக்கு முன்புதான் மனீஷா கொய்ராலாவுக்கு திருமணம் நடந்தது. சாம்ராட் தஹால் என்பவரை மணந்துள்ளார்.

இருவரும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் தனது பேஸ்புக்கில், ‘இந்த நிமிஷம் டைவர்ஸ் கிடைச்சா எவ்வளவோ நல்லாருக்கும்’ என்று எழுதியிருந்தார் மனீஷா.

இது அந்த தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதை நீக்கிவிட்டார் மனீஷா.

விசாரிக்கையில், ‘அப்படி எழுதியது உண்மைதான். அந்த நேரத்தில் நான் இருந்த மனநிலையில் அப்படி எழுதிவிட்டேன். சமயத்தில் கோபம், ஆத்திரம் அளவுக்கு மீறும்போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சில காரியங்களைச் செய்துவிடுவதில்லையா…

வாழ்க்கையில் எல்லாமே ஒரு பகுதிதான். சந்தோஷம், காதல் போன்றவற்றின் பிரிக்கமுடியாத பகுதி வேதனை, வலி எல்லாமே. இதை உணரவேண்டும்…” என்றெல்லாம் தத்துவமாகப் பேசினார் மனீஷா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: