திரையுலகம் சந்தானம் 5 விரல்,கஞ்சா கருப்பு 3 விரல்,வடிவேலு 10 விரல்

சந்தானம் 5 விரல்,கஞ்சா கருப்பு 3 விரல்,வடிவேலு 10 விரல்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

கோயமுத்தூர்ல குண்டு வச்சுட்டு கோடம்பாக்கத்துல `சவுக்கியமா?`ன்னு கேட்கிறாரு விவேக்.
உத்தம புத்திரன் படத்தில இவர் பேசிய டயலாக், மேற்படி ஏரியாவை அந்தல சிந்தலயாக்கியதை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
தமிழ் சினிமாவில் வேகத்தையும் வெற்றியையும் தீர்மானிக்கிற விஷயத்தில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு நாளுக்கு நாள் டெவலப் ஆகிக் கொண்டேயிருக்கிறது.
வடிவேலுவின் நகரம், சந்தானத்தின் மந்திரப்புன்னகை, கஞ்சா கருப்பின் மகிழ்ச்சி என்று போகிற போக்கில் விளம்பரப்படுத்தினாலும் ஆச்சர்யமில்லை. இந்த திடீர் போட்டியில் பெயரை சம்பாதிப்பதோடு, பாக்கெட்டையும் நிரப்பிக் கொள்ள தயாராகிவிட்டார்கள் இந்த காமெடியர்கள்.
ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் சம்பளம் கேட்க ஆரம்பித்திருக்கிறாராம் சந்தானம். முப்பது நாளும் பிசியாக இருப்பதால், பெரிய ஹீரோக்கள்கூட அம்மாடியோவ்… என்று வயிறெரிச்சல்படுகிற சம்பளம் அது. கருப்பு மட்டும் சும்மாயிருப்பாரா? மூன்று விரலை நீட்டுகிறாராம். (தினக்கூலியாகதான்) வடிவேலு ஏற்கனவே பத்து விரலையும் நீட்டிக் கொண்டிருக்கிறார்.
என்றாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் இந்த மூவருக்கும்.
ஹ்ம்ம்ம் இப்பல்லாம் சித்திரத்தை வச்சுதான் சுவரே ரெடியாகுது. என்ன செய்ய?

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி