திரையுலகம் வேங்கைக்காக இரு இயக்குனர்கள் போராட்டம்

வேங்கைக்காக இரு இயக்குனர்கள் போராட்டம்

director hari

அருவா, சிவகங்கை என்று ஒன்றிரண்டு பெயர்களை யோசித்திருந்த ஹரி, கடைசியாக முடிவு செய்தது வேங்கை என்ற டைட்டிலை! தனுஷ்-தமன்னா இணைந்து நடிக்கும் படத்திற்குதான் இப்படி ஒரு பெயரை வைத்திருந்தார் அவர். ஆனால் ஹரியை முந்திக்கொண்டு இந்த டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டார் புதுமுக இயக்குனரான பாலா. அதற்காக முறைப்படி அனுமதியும் பெற்றுவிட்டார்.

நினைச்சது கிடைக்கலேன்னா, கிடைச்சதை நினைச்சுக்க வேண்டியதுதான்னு போய்விடுகிற மூடில் இல்லை ஹரி. பாலாவுக்கு போன் பண்ணி டைட்டிலை கொடுத்திரு என்கிறாராம். பாலா மறுத்தாலும் ஹரி தரப்பிலிருந்து தொடர்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களாம். இந்த நிலையில் இயக்குனர்கள் சங்கத்திற்கு வேறொரு வேலையாக வந்திருந்த ஹரி, மிஷ்கின் விவகாரத்திற்காக அங்கு வந்திருந்த பாலாவை பார்த்ததும் பிடிபிடியென்று பிடித்துக் கொண்டாராம்.

ஆளு தெரியாம மோதாதே… மரியாதையா டைட்டிலை கொடுத்திரு என்று ஹரி முழங்க, எவ்வளவு மிரட்டினாலும் வேங்கையை தர முடியாது என்று பாலா மறுக்க, மிஷ்கின் பிரச்சனையை தள்ளி வைத்துவிட்டு இவர்கள் மேட்டரை கவனிக்கும்படியானது உதவி இயக்குனர்களுக்கு! இன்னமும் பிரச்சனை முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பதால் வேங்கை போலவே சீறிக் கொண்டிருக்கிறார்கள் இரு தரப்பும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி