திரையுலகம் பிரபுதேவா பாராட்டு….நயன்தாராவுக்கு தெரியுமா…

பிரபுதேவா பாராட்டு….நயன்தாராவுக்கு தெரியுமா…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

ஜெயம்ரவி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் எங்கேயும் காதல் என்ற படத்தை இயக்கி வரும் பிரபுதேவா அப்படத்தின் ஆடியோ ரிலீஸை சத்தமில்லாமல் ஒரு வீட்டிலேயே முடித்துவிட்டு பாரீஸுக்கு கிளம்பிவிட்டார்.
தற்போது சிங்கப்பூரில் நடனப் பள்ளியைத் துவக்கியிருப்பதாக பிரபுதேவா கூறியுள்ளார்.

இது பற்றி மேலும் தெரிவித்த அவர்,

“இப்போது தொடர்ந்து ஷூட்டிங்ல இருக்கிறதால சென்னையில் நடனப் பள்ளியைத் துவக்க முடியலை. ஆனா கண்டிப்பா ஆரம்பிச்சிருவேன். ஆனால் அதுக்கு நிறைய எனர்ஜியும் தேவைப்படுது என்றார்.

பேச்சு நடனம் பற்றி திரும்ப, “இப்போதைக்கு தமன்னா சூப்பரா ஆடுறாங்க.. இவங்களால நடிக்க முடியுமா.. ஆட முடியுமான்னு சந்தேகப்பட வைக்கிற அளவுக்கு இருந்தாங்க திரிஷா. ஆனால் சொன்னால் அதை கெட்டியாப் பிடிச்சுக்குற திறமை அவங்ககிட்ட இருக்கு. மளமளன்னு பிக்கப் ஆயிட்டாங்க. ஸ்ரேயா பத்திச் சொல்லவே வேண்டாம். கதக் டான்ஸர் வேற.. நளினமா ஆடுறாங்க.. சுனைனா, பூர்ணா ரெண்டு பேரும் புது ஹீரோயின்களா இருந்தாலும் பிரமாதமா ஆடுறாங்க” என்று சர்டிபிகேட் தருகிறார் நடனப் புயல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி