திரையுலகம் “வ குவாட்டர் கட்டிங்” இப்ப எங்க “குவாட்டர் கட்டிங்”

“வ குவாட்டர் கட்டிங்” இப்ப எங்க “குவாட்டர் கட்டிங்”

vaquatercutting

இதுவரை ‘வ குவாட்டர் கட்டிங்’ என்றே தலைப்பை விளம்பரங்களில் வெளியிட்டு வந்தனர் அந்தப் படத்தைத் தயாரித்த ஓய் நாட் புரொடக்ஷனும், வெளியிட்ட தயாநிதி அழகிரியும். இதற்கு வரிவிலக்கு வேறு கிடைக்க, படத்துக்குக் கிடைத்ததை விட பல மடங்கு அதிக அர்ச்சனை இந்த வரிவிலக்கு மேட்டருக்குக் கிடைத்தது.

முதல்வரின் பேரன் என்ற ஒரே தகுதியால், இந்த மாதிரி விதி மீறல்களைச் செய்கிறார்கள். வ குவாட்டர் கட்டிங் எந்த வகையில் தமிழ் பெயர், அதற்கு ஏன் வரிவிலக்கு? என்று போட்டுத் தாளித்துவிட்டார்கள் பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும்.

இதன் விளைவு, படம் வெளியான சில தினங்களுக்கு ‘வ சரக்கு வச்சிருக்கேன்’ என்று விளம்பரம் வெளியிட்டார்கள். ஆனாலும் விமர்சனம் அடங்கவில்லை. இப்போது எதுவுமே வேண்டாம் என்று நினைத்துவிட்டார்களோ என்னமோ… வெறு ‘வ’ என்று மட்டும் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்!

குவாட்டரும் கட்டிங்கும் காணாமல் போயிருப்பதை விட முக்கியமான ஒரு மேட்டரும் உண்டு… அது, வெளியானதில் படம் வெளியான பாதித் தியேட்டர்களில் முதல் வாரம் முடிவதற்குள்ளாகவே படமும் காணாமல் போயிருப்பதுதான்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி