திரையுலகம்,முதன்மை செய்திகள் “மைனா” ஜெயிலர் பாஸ்கர் இவர்தான்…

“மைனா” ஜெயிலர் பாஸ்கர் இவர்தான்…

mynaa - sethu

சினிமா தன் கதையில் காதலர்களாக வரும் நடிகர்களை ஏராளமாகப் பார்த்துள்ளது. சினிமா தன்னையே நேசிக்கும் காதலர்கள் சிலரை மட்டுமே பார்த்துள்ளது. அப்படி நிஜமான சினிமா காதலர்களால்தான் சினிமா சிறப்பாக இருக்கிறது.

அப்படி திரைப்படம் மீது கலப்படம் இல்லாத பாசத்தை வைத்திருப்பவர்தான் சேது. இவர் ‘மைனா’ படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் அறிமுகம் ஆகிறவர். இவரது இயற்பெயர் சேதுபிள்ளை. சினிமாவுக்காக சேது. இவருக்குப் பூர்வீகம் கேரளா.

எம்.பி.ஏ. படித்த இவருக்கு சினிமா மீது காதல். தமிழ்த்திரைப்பட உலகில் பலரும் அறிமுகம். இயக்குநர் பிரபு சாலமன் இவருக்கு நெருக்கமான நண்பர். சினிமா பற்றி பல்வேறு எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இறுக்கமான நட்பு.

சேதுவின் உள்ளத்தில் புதைந்து கிடந்த நடிப்பார்வத்தை புரிந்து கொண்ட பிரபு சாலமன், ஒருநாள் தான் இயக்கும் ‘மைனா’ படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்.

ஏதோ சின்ன பாத்திரமாக இருக்கும் என்றெண்ணி போயிருக்கிறார். போனவருக்கு இன்ப அதிர்ச்சி. படத்தில் முக்கியமான ஜெயிலர் பாஸ்கர் என் கிற கதாபாத்திரம் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் சேது.

‘படம் தேனி பகுதியில், கொரங்கனியில் நடக்கும் கதை. கிராமம் சார்ந்த கேரக்டர். ஏதோ சிறு கேரக்டர் என்று நினைத்தேன். போன பிறகுதான் தெரிந்தது. பெரிய ரோல் என்று மிகவும் சக்தி வாய்ந்த ரோல் என்று. நானோ தலைமுடி வளர்த்து பக்கா சிட்டிக்காரனாக அடையாளம் தெரியாதபடிக்கு பிரபு சாலமன் மாற்றி விட்டார். அவர் கற்பனையிலிருந்த ஜெயிலராக என்னை மாற்றி விட்டார்’ என் கிறார்.

படத்தில் நடித்த அனுபவம் பற்றி சேது கூறும் போது…

ஏதோ சின்ன ரோல் என்று நினைத்தேன். ஆனால் ஒரு படத்தில் செய்யப்படும் அறிமுகம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்று டைரகடர் விரும்பினார். அதனால் எனக்கு நல்ல அழுத்தமான ரோலைக் கொடுத்திருக்கிறார். அந்த ஜெயிலர் ரோல் படம் முழுக்க வரும்படியான பவர்ஃபுல் ரோலாக உருவாக்கியுள்ளார். மூணார், தேனி, கம்பம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் படப்படிப்பில் கலந்த் கொண்டேன். மூணாரில் மட்டுமே 60 நாட்கள் நடிக்க வைத்தார்கள். டைரக்டர் பிரபு, உடன் நடித்தவர்கள் ஹீரோ வித்தார்த், ஹீரோயின் அமலா மற்றும் யூனிட் எல்லாருமே சகஜமாக அன்பாகப் பேசிப்பழகியது மறக்க முடியாத அனுபவங்கள்’ என் கிறார் பூரிப்புடன். தம்பி ராமையா மிகவும் உதவிகரமாக இருந்தார்.

தன் பாத்திரம் எப்படி இருக்கும் என்பது பற்றிப் பேசும் போது…

” பருத்திவீரன்’ படத்தில் நடித்தவர் என்று கார்த்தியை நேரில் பார்ப்பவர்கள் கூறமுடியாது. நேரில் மாடர்னாக சிட்டி பையனாக இருப்பார். அது போலத்தான் என் கேரக்டரும் இருக்கும் அதற்கு முழுமுதற்காரணம் டைரக்டர் பிரபு தான்’ என் கிற சேது, தீவிரமான சினிமா ரசிகர். எப்படிப்பட்ட படங்கள் பிடிக்கும் என்றால் ‘ஒடுகிற எல்லாப் படங்களும் பிடிக்கும். ஏதோ ஒரு விஷயம் இருக்கிற படம்தான் ஓடும் ‘பருத்திவீரன்’ ‘சுப்பிரமணியபுரம்’ ‘பையா’ இவை முணுமே முணு வீதம். ஆனாலும் ஏதோ புதுசா ரசிக்கும்படி விஷயம் இருந்தால்தான் ஓடியது. அதுபோன்ற கமிர்ஷியல் படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். சினிமா என்பது கவலைகள் தீர்க்கும் மன அழுத்தம் போக்கும் எண்டர்டெய்ன்மெண்ட்.. என்பது என் கருத்து. நல்ல எண்டர்டெய்னர் எனக்கு பிடிக்கும். பெரிய ஹீரோக்களை மட்டுமல்ல வடிவேல், விவேக் போன்றவர்களும் பெரிய எண்டர்டெய்னர் என்பது என் அபிப்ராயம்’ என் கிறார். தினமும் தூங்கப் போகும் முன் வடிவேல், விவேக் காமெடி ஷோ டிவியில் பார்க்காமல் தூங்கப் போவதில்லையாம்.

பிரபு சாலமன் – சேது இருவரின் நட்புதான் படவாய்ப்பை தேடிக் கொடுத்ததா? என்றால், ‘இல்லை’ என்று மறுக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். ‘அந்த ஜெயிலர் கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியதல் நடிக்க வைத்தேன். என் நம்பிக்கை வீண் போக வில்லை’ என் கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

பெயர் சொல்கிற மாதிரி பாத்திரங்கள் தான் கனவு. அதற்கான கதைகளை தேர்ந்தெடுத்து ஒப்புக் கொள்ளவே விருப்பம் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி