ஹிந்தி படத்தில் அசின் படுக்கையறை காட்சிகள்…

விளம்பரங்கள்

asin

இந்தி மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள அதிரடி கவர்ச்சிப் புரட்சியில் இறங்கியுள்ளாராம் அசின்.

இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன் ரெடி படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாவதற்கு முன்பு இந்தக் காட்சிகளை வெளியிட்டு, மார்க்கெட்டில் புதிய வாய்ப்புகளை பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக மும்பை பத்திரிகைகள் கிசுகிசுக்கின்றன.

வாய்ப்புக் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் கவர்ச்சி ஆயுதத்தை முழுசாகப் பிரயோகிப்பது நடிகைகள் வழக்கம். அசினும் இதற்கு விலக்கில்லை.

கஜினி மூலம் இந்திக்கு போன முதல் படத்திலேயே இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். அது படு தோல்வி அடைந்தது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. ஆரம்பத்தில் கஜினி வெற்றி தந்த மிதப்பில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்களிடம் ஏற்கனவே கண்டிஷன் போட்டிருந்தார்.

ஆனால் இந்த கண்டிஷனுக்கு இப்போது வேலையில்லாமல் போய்விட்டது.

இந்தி கதாநாயகிகள் அனைவரும் நீச்சல் உடை வரை தாராள கவர்ச்சி காட்டுவதால் வாய்ப்புகளை தக்க வைக்க அசினும் தற்போது பிடிவாதத்தை தளர்த்தியுள்ளார்.

சல்மான் கானுடன் தற்போது நடித்து வரும் ரெடி படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளாராம். நெருக்கமாக படுக்கையறை காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

விரைவில் இந்தக் காட்சிகள் தொடர்பான படங்களை வெளியிட உள்ளாராம் அசின். இதன் பிறகு இந்தியில் தனது ரேஞ்சே வேறு என்றும் அவர் கூறி வருகிறாராம்!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: