இலங்கையின் போர்குற்ற ஆதாரங்கள் சில…

விளம்பரங்கள்

வன்னிப் போரின் இறுதியில், இலங்கைப் படையினரிடம் சரணடைந்த மற்றும் படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் இலங்கையின் தேசிய கீதத்தைச் சரியான முறையில் சிங்களத்தில் பாடத் தவறினார்கள் என்ற குற்றம்சாட்டி இலங்கைப் படையினரால் தாக்கிச் சித்திரவதை செய்யப்படுவதாக அவுஸ்ரேலிய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

மேலும், வன்னிப் போரின் இறுதியில், இலங்கைப் படையினரிடம் சரணடைந்த மற்றும் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் நடத்தப்படும் முறை குறித்து கிறீன் லெஃப்ட் (புசநநn டுநகவ) என்ற அந்த இணையத்தளம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது,

இலங்கையின் தேசிய கீதத்தைச் சிங்களத்தில் சரியான முறையில் பாடாத சிறுவன் ஒருவன் நாள் முழுவதும் வெய்யியில் முழந்தாளில் இருக்குமாறு பணிக்கப்பட்டதாகவும், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது இருமிய மற்றொரு சிறுவன் சப்பாத்து கால்களால் உதைக்கப்பட்டதாகவும் இம்முகாமில் இருந்து விடுதலையான ஒருவர் கூறியதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.

முகாமில் இருந்து சிலர் படையினரால் பலவந்தமாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு என்ன நடந்தது என தங்களுக்குத் தெரியாதெனவும் மற்றொருவர் தெரிவித்துள்ளார். முகாமில் இருந்து மூன்று பேர் தப்பிச் சென்றதாக மற்றொரு சந்தர்ப்பத்தில் படையினர் தங்களிடம் கூறியதாகவும், ஆனால், படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ள முகாம்களில் இருந்து தப்பிச் செல்வது சாத்தியமானதெனத் தான் நம்பவில்லையெனவும் இவ்வாறு தப்பிச் செல்வதாக கூறப்படும் நபர்களை படையினரே பலவந்தமாக அழைத்துச் செல்வதாக அவர் கூறினார்.

படையினரால் தாம் விசாரிக்கப்பட்டபோது, நான்கு அல்லது ஐந்து சந்தர்ப்பங்களில் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், தற்பொழுது மூச்சு விடுவது சிரமாக உள்ளதாகவும் உடலில் உட்காயங்கள் உள்ளதாகவும் மற்றொருவர் தெரிவித்துள்ளார். இப்படியாகப் பலர் கடுமையான சித்திரவதைக்குள்ளாவதாகவும் அவர் தெரிவித்தாரென இவ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.youtube.com/watch?v=W5KDXlY4eR8

http://www.youtube.com/watch?v=vdFKlQT_Ta8&feature=related

http://www.youtube.com/verify_age?next_url=http%3A//www.youtube.com/watch%3Fv%3DK7leSySfn0A

http://www.youtube.com/watch?v=eksn5X7lT6s&feature=related

http://www.youtube.com/watch?v=QRy52K0gjCQ&feature=related

http://www.youtube.com/watch?v=Mb9QX4AYGys&feature=related

http://www.youtube.com/watch?v=IZODCxStdHg&feature=related

http://www.youtube.com/watch?v=Ikqp4u-fmtA&feature=related

http://en.kendincos.net/video-hndhvvp-shocking-leak-sri-lankan-army-mass-rape-and-execution-of-tamil-women-report-by-australian-media-.html

http://www.pakistan.tv/videos-war-crimes-during-the-sri-lankan-%5BsGGwyMeLs70%5D.cfm

http://www.youtube.com/watch?v=R7zaSJMkXuE&feature=related

http://www.youtube.com/watch?v=lDSsEXjsbhQ&feature=related

http://www.youtube.com/watch?v=IF0fJJn6oi0&feature=related

http://www.youtube.com/watch?v=R7zaSJMkXuE&feature=related

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: