திரையுலகம் ரஜினி பார்த்த உத்தமபுத்திரன்…

ரஜினி பார்த்த உத்தமபுத்திரன்…

Tamil Superstar Rajinikanth

எந்திரன் ரிலீஸுக்கு பின்னர் ரஜினி செம ரிலாக்ஸ் மூடில் இருக்கிறார். ஒரு காலத்தில் பொது விழாக்கள் என்றாலே எஸ்கேப்பாகி ஓடும் ரஜினி இப்போது நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது.

இன்று ரிலீசான உத்தமபுத்திரன் படத்தின் ஸ்பெஷல் காட்சி திரையுலக முக்கிய பிரமுகர்களுக்கு நுங்கம்பாக்கத்திலுள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடைபெற்றது. ரஜினியுடன் அவரது குடும்பத்தினர் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா அஸ்வின் ஆகியோரும் கண்டுகளித்தனர். இவர்களோடு விவேக், ஒய்.ஜி. மகேந்திரன், உத்தமபுத்திரன் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி