விளையாட்டு முத்தையா முரளிதரன் பார்வையில் இலங்கை இனப் பிரச்சனை.

முத்தையா முரளிதரன் பார்வையில் இலங்கை இனப் பிரச்சனை.

Sri Lankan cricketer Muttiah Muralithara

தற்சமயம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அங்குள்ள முன்னணிப் பத்திரிகையான சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்குப் பேட்டியொன்று அளித்துள்ளார். அப்பேட்டியில், தமிழர்கள் மிகுந்த கடினமான காலப்பகுதியைச் சந்தித்தார்கள்,
இலங்கையிலுள்ள பிரச்சனைகள் உங்களை பலப்படுத்த உதவியதா? என்று கேட்டபோது, “தமிழர்கள் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சி வந்தபோது சிங்களவர்களும் பல சிரமங்களைச் சந்தித்தனர், பலர் கொல்லப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 1977 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் தங்கள் வீடும் தனது தகப்பனாரில் பிஸ்கட் நிறுவனமும் கூட எரியூட்டப்பட்டதாகக் கூறியுள்ள முரளி, இவற்றைச் செய்தது அரசியல் வாதிகள் இல்லை என்பதால் தாம் அச்செய்கைகளை மன்னித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது மிகுந்த வலிமிகுந்த சம்பவம் என்றும், அக்கட்டத்தில் தம்மைக் கொல்ல வந்த காடையர்களிடம் இருந்து தமது குடும்பத்தைக் காப்பாற்றியவர்கள் சிங்களவர்கள் என்றும் கூறியுள்ள முரளி இதைத் தாம் மறக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு கலவரம் பற்றிக் கூறியுள்ள முரளி, அங்கு கலவரங்கள் இருந்தன என்றாலும் 1983 ஆம் ஆண்டின் பின்னர் இவை சுமுக நிலைக்கு வந்துவிட்டது என்றுள்ளார். மேலும், தாம் ஏழு ஆண்டுகளாக தாம் விடுதியில் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுடன் வாழ்ந்ததாகவும், அது கஷ்டமாக இருக்கவில்லை என்றும் சொன்னார்.

அடுத்து வடக்கிலுள்ள தமிழ்ப் பிரதேசம் ஒன்றில் ஒரு கிராமத்தைக் கட்டியெழுப்புவதே தனது திட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார். சுனாமியின் பின்னர் 2005 ஆம் ஆண்டில் தாம் இதுபோன்று உதவிகள் செய்திருந்ததாகக் கூறியுள்ள அவர், அடுத்து வடக்கில் தமிழ்ப் பகுதியில் கிராமம் அமைக்க உள்ளதாகவும், ஜனாதிபதி மஹிந்த 300 வீடுகள் கட்டுவதற்கு தமக்கு 50 ஏக்கர் காணி தந்துள்ளதாகவும் சொன்னார். இத்திட்டத்தின் கீழ் 15,000 மக்கள் நன்மையடைவார்கள் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி