திரையுலகம் தமிழ் வம்சவாளியைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளனின் 'டெவில்'

தமிழ் வம்சவாளியைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளனின் 'டெவில்'

manojnightshyamalan

ஹாலிவுட்டின் பிரபல தமிழ் வம்சவாளியைச் சேர்ந்த இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளனின் கதையில் உருவாகியுள்ள ‘டெவில்’ திரைப் படம் தீபாவளியன்று இந்தியாவில் திரைக்கு வருகிறது.

இப்படத்திற்கு தி நைட் குரோனிக்கிள்ஸ்-டெவில் என்பது முழுப் பெயராகும். ஒரு அலுவலக லிப்ட்டுக்குள் ஐந்து பேர் சிக்கிக் கொள்கின்றனர். அதில் யாரோ ஒருவர் பேய். இதுதான் இப்படத்தின் கதை.

மனோஜ் நைட் ஷியாமளனும், மீடியா ரைட்ஸ் கேபிடல் நிறுவனமும் இணைந்து மூன்று சூப்பர் நேச்சுரல் ஹாரர் படங்களை உருவாக்கவுள்ளன. அந்த வகையில் உருவான முதல் படம் த சிக்ஸ்த் சென்ஸ். டெவில் அந்த வரிசையில் இரண்டாவது படமாகும். இப்படத்தை ஷியாமளன் இயக்கவில்லை. இணை தயாரிப்பு மற்றும் கதை மட்டுமே அவருடையது.

ஹாலிவுட்டில் இப்படம் செப்டம்பரில் வெளியானது.

ஒரு நகரில் உள்ள அலுவலக கட்டடத்தில் உள்ள லிப்ட்டில் சிலர் ஏறுகின்றனர். லிப்ட் பாதியில் நின்று போய் விடுகிறது. அதில் மொத்தம் ஐந்து பேர் சிக்கிக் கொள்கின்றனர். அந்த ஐந்து பேரில் ஒருவர் பிசாசு. அது யார் என்பதுதான் சஸ்பென்ஸ்.

படம் முடியும் வரை ‘அது’ யார் என்ற யூகத்தில் படம் பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தும் ஷ்யாமளன், இறுதியில் அது யார் என்பதை காட்டி மேலும் திகில் ஊட்டுகிறார்.

மிரட்டலுக்குப் பேர் போன ஷியாமளனின் இந்தப் படம் தீபாவளியன்று இந்தியாவில் ரிலீஸாகிறது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி