ஹீரோவிடம் அடிவாங்கிய நடிகை….

விளம்பரங்கள்

udhayathara

ஹீரோ கன்னத்தில் அறைவது போன்ற காட்சியில் டைமிங் மிஸ் ஆனதால், நிஜமாகவே கன்னத்தில் பளார் என அறை விழ பொறி கலங்கிப் போய் கன்னம் வீங்கி கதறி அழுதாராம் நடிகை உதயதாரா.

இப்போதெல்லாம் ஷூட்டிங்கின்போது நடக்கும் நிஜக் காட்சிகள் குறித்த நிகழ்வுகள் கோலிவுட்டிலிருந்து நிறைய வருகிறது. கடலில் படப்பிடிப்பு நடத்தியபோது ஹீரோயின் அல்லது ஹீரோ மூழ்கிய செய்திகள், அடிப்பது போன்ற காட்சியின்போது நிஜமாகவே அடித்து விடுவது, ஹீரோயினைக் கடிப்பது போன்ற காட்சியில் நிஜமாகவே கடித்து விடுவது (நடிகர் விக்னேஷ் நடிகையின் கன்னத்தைக் கடிப்பது போல நடித்தபோது நிஜமாகவே கடித்து விட்டதாக செய்தி வந்தது) என்று நிஜங்கள் குறித்த பல செய்திகள் வருகின்றன.

அந்த வரிசையில் ஹீரோவிடம் அடி வாங்கிய ஹீரோயின் கதை குறித்த செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது. பகவான் என்று ஒரு படம். யுவராஜா என்பவர்தான் நாயகன். உதயதாராதான் நாயகி.

நாயகியை ரவுடிகள் சிலர் கிண்டல் செய்கிறார்கள். அதை நாயகி ஹீரோவிடம் போய் சொல்கிறார். பொங்கி எழும் ஹீரோயினை அழைத்துக் கொண்டு ரவுடிகளிடம் செல்கிறார். ஆனால் அங்கு ரவுடிகளாக ஹீரோயின் சொன்னவர்கள் எல்லாம் சமூக சேவகர்கள் எனத் தெரிகிறது.

நாயகி தன்னை ஏமாற்றி விட்டதை அறியும் ஹீரோ கடும் கோபமடைந்து அவரை பளார் என அறைகிறாராம். இது சீன். இந்த சீனில் யுவராஜும், உதயதாராவும் நடித்தனர். யுவராஜ் ஓங்கி அறைவது போல நடித்தபோது படாரென உதயதாரா திரும்பிக் கொள்ள வேண்டும். ஆனால் டைமிங் மிஸ் ஆகி உதயதாரா திரும்பாமல் இருந்து விட்டார். பிறகென்ன கன்னம் பளுத்துப் போய் வீங்கி விட்டதாம்.

வலி தாங்க முடியாமல் உட்கார்ந்து விட்டாராம் உதயதாரா. கதறி அழுத அவரை நீண்டநேரம் ஆறுதல் படுத்தினார் யுவராஜ். இருந்தாலும் உதயதாரா தேறி வர அரை மணி நேரம் ஆனதாம். பின்னரே அந்தக் காட்சியமைப் படமாக்கி முடித்தார்களாம்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: