வருடந்தோறும் நடக்கும் தேவர் ஜெயந்தி அராஜகம்….

விளம்பரங்கள்

devarjayanthi

மதுரையில் நேற்று தேவர் ஜெயந்தியையொட்டி வந்தவர்களில் பலர் கல்வீச்சில் இறங்கியதால் மதுரையின் பல பகுதிகளிலும் பதட்டம் ஏற்பட்டது. இந்த கல்வீச்சில் 25 அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன.

நேற்று தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஒரே நேரத்தில் பெருமளவில் கூட்டம் சேர்ந்ந்து விடாத வகையில் போலீஸார் அஞ்சலி செலுத்த வந்தவர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.

ஆனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சிலர் திடீரென பஸ்கள் மீது கற்களை வீசித் தாக்கினர். இதனால் போலீஸார் தடியடியில் ஈடுபட்டு கூட்டத்தைக் கலைத்து விரட்டினர். ஆனால் போலீஸார் மீதும் கற்கள் வீசப்பட்டதால் கூட்டத்தினரை தடியால் அடித்து போலீஸார் கலைத்தனர்.

இதனால் தேவர் சிலை உள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்கள் அந்தப் பாதை வழியாக இயக்காமல் நிறுத்தப்பட்டன. இதேபோல தொடர்ந்து நடந்ததால் தடியடி தொடர்ந்து கொண்டிருந்தது. மாலை வரை அவ்வப்போது கூட்டத்தினர் வன்முறையில் இறங்குவதும், போலீஸார் தடியடி நடத்துவதுமாக இருந்ததால் கோரிப்பாளையத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

அங்கு மட்டுமல்லாமல்,மதுரையின் பல பகுதிகளிலும் இதே நிலைதான் தமுக்கம் மைதானப் பகுதி, கீழவாசல், ஜெயஹிந்து புரம், திடீர் நகர், வசந்த நகர், தல்லாகுளம், நரிமேடு, பழங்காநத்தம், அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் மீது சிலர் கலவீசித் தாக்கினர்.

இந்த கல்வீச்சில் மொத்தமாக 25 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: