தமிழில் நடித்தால் முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே

விளம்பரங்கள்

priyamani

தமிழ் படங்களில் நடித்தால் முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பாராம் பிரியா மணி. இதை ஒரு பாலிசி போல வைத்திருப்பதால்தான் அவரைத் தேடி பட வாய்ப்பு ஏதும் பாயவில்லை என்கிறார்கள்.

பிரியா மணிக்கு தமிழில் துடைத்து எடுத்தது போல எந்த வாய்ப்பும் இல்லாத நிலை. கவர்ச்சிக்கு அவர் தாவியதிலிருந்தே அவரைத் தேடி பட வாய்ப்புகள் பெரிய அளவில் போகவில்லை. இதனால் தெலுங்கில் தற்போதைக்கு செட்டிலாகியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவுக்காக பிரத்யேகமான ஒரு பாலிசியைக் கையில் வைத்துள்ளாராம் பிரியா மணி. அது, நடித்தால் முன்னணி மற்றும் சூப்பர் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்பதாம்.

இதனால் தமிழ் சினிமாவில் தற்போது பிசியாக இருக்கும் பிற நடிகர்கள் கடுப்பாகியுளள்ளனராம். தமிழ் சினிமாவிலும் பிரியா மணியை நடிக்க வைக்கும் ஆர்வமும் அவ்வளவாக இல்லை என்பதால் பிரியா மணிக்கு தொடர்ந்து தமிழ்ப் படம் கைக்குப் போய்ச்சேராத நிலை தொடருகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: