சீமானுக்காக காத்திருக்கும் இயக்குநர்

விளம்பரங்கள்

seeman

இயக்குநர் சீமான் சிறை சென்றாலும் அவருக்காக ஆதரவாகவும், ஆரவாரமாகவும் காத்திருக்கும் தம்பிகள் ஏராளம். அதில் ஒருவர் ஐந்து கோவிலான். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் இயக்கும் முதல் படம் ‘கலிங்கத்துப்பரணி’ இந்த படத்தில் சீமானை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்த இவர் இப்போது சீமானுக்காக காத்திருக்கிறார்.

முதல் படத்திலே ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துவிட்டார் ஐந்து கோவிலான், முதல் பிரச்சனையாக இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ‘களவானி’ விமல் கொடுத்த சம்பள பிரச்சனை. இதனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் விமலை நீக்கி விட்டு வேறு ஹரோவை வைத்து படப்பிடிப்பை துவங்கலாமா? என்ற நிலைக்கு படப்பிடிப்புக்குழு வர, எப்படியோ சங்கங்களின் பஞ்சாயத்தினால் அனைத்தும் சரியாகி படப்பிடிப்பும் துவங்கிவிட்டது.

இப்போது அனைத்தும் சரியான பிறகு ஐந்து கோவிலானுக்கு மற்றொரு பிரச்சனை சீமான் சிறையில் இருப்பதுதான். இந்த படத்தின் திரைக்கதையை எழுதும்போதே இதில் சீமானுக்கு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். சீமான் சிறையில் இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தில் அவரைத்தவிர வேறு யாரையும் நடிக்க வைக்கவும் போவதில்லையாம். சீமான் எப்போது வருகிறாரோ அப்போது வந்து நடிக்கட்டும் அதுவரை அவருக்காக காத்திருப்போம் என்று தயாரிப்பாளரிடமே கூறிவிட்டாராம்.

சீமானின் மீது இந்த அளவுக்கு பற்று வைத்திருக்கும் ஐந்து கோவிலான், சீனானின் நாம் தமிழர் இயக்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: