தமிழீழ விடுதலைப் புலிகள் வடி கட்டிய முட்டாள்கள்

விளம்பரங்கள்

vikramabahu_karunaratne

தமிழீழ விடுதலைப் புலிகள் வடிகட்டிய முட்டாள்கள் என்று தெரிவித்து உள்ளார் இலங்கை இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்து உள்ளார். அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்து உள்ளவை வருமாறு:-

”புலிகள் படுமுட்டாள்கள். அவர்களின் முட்டாள்தனத்தால்தான் அழிந்தார்கள். ஆனால் புலிகளுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை நான் வன்மையாக எதிர்க்கின்றேன்.

புலிகளை ஒழிப்பதற்கு கடந்த வருடம் மே மாதம் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கடுமையாக ஆட்சேபிக்கின்றேன். ஏனெனில் புலிகளை கொல்ல வேண்டிய தேவை கிடையாது.

புலிகளுடன் அரசியல் பேசி இருக்க வேண்டும். அவர்களின் அரசியல் பிரச்சினையை அரசியல் ரீதியாக கையாண்டு இருக்க வேண்டும். இராணுவ தீர்வு அல்லாத மாற்று வழிகள் இருந்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: