திரையுலகம் '3 இடியட்ஸின்' முதல் பாடலை பெற்றார் ஷங்கர்

'3 இடியட்ஸின்' முதல் பாடலை பெற்றார் ஷங்கர்

Director_Shankar

ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா போன்ற இசை மேதைகளின் மறு பிரதியாகவே ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் பொதுவாக தோன்றுகின்ற போதிலும், சிறந்த இயக்குனர்களுடன் இணையும் போது அவரது பாடல்கள் சிறப்பாகவே அமைகிறது. Hans Zimmer மற்றும் James Horner போன்ற மேற்கத்திய இசையமைப்பாளர்களின் தாக்கத்தினை ஹாரிஸின் இசையில் அடிக்கடி காணலாம்.

டோலிவுட், கோலிவுட் என இரண்டு இடங்களிலும் ஹாரிஸ் தற்பொழுது பிஸியாக வலம் வருகிறார். இவரது இசையில் கடைசியாக ‘வாரணம் ஆயிரம்’ படப்பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டின. விரைவில் உருவாகவுள்ள ‘3 இடியட்ஸ்’ மறுபதிப்பில் ஷங்கருடன், ஹாரிஸ் இரண்டாம் முறையாக இணைய உள்ளார். இப்படத்தில் ஹாரிஸ் தன் தனித்திறமையை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முதல் ‘ட்யூன்’ ஷங்கரிடம் தரப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு வெளிவந்த ஷங்கரின் ‘அந்நியன்’ படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் சுமாரான வெற்றியை ஈட்டின என்பது குறிப்பிடத்தக்கது. ‘3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜயும், தெலுங்குப் பதிப்பில் மகேஷ் பாபுவும் நாயகர்களாக நடிப்பது இறுதி செய்யப்பட்டுவிட்டது. பள்ளி மாணவன் போன்ற செய்கைகளுடன் இப்படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

பிரம்மாண்ட, வரலாற்றுப் பூர்வமான படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகப்பொருத்தமாக இருப்பது போல், சுமாரான கமர்சியல் படங்களுக்கு ஹாரிஸ்ஜெயராஜின் இசை பொருத்தமாகவே இருக்கும்.

ஆரம்பத்திலிருந்தே இப்படத்திற்கு பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்படத்தின் போக்கை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ‘3 இடியட்ஸ்’ ஷங்கரின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது. அது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் படத்தின் முதல் வார வருமானமும், விளம்பர நடவடிக்கைகளும் மட்டுமே படத்தினை காப்பாற்ற முடியும். அதே நேரத்தில் எந்தவொரு கதையினையும் வெற்றிப்படமாக்குவதற்கு வேண்டிய திறமை ஷங்கருக்கு மிக அதிகமாக இருப்பது நாம் அறிந்ததே

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி