குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்

விளம்பரங்கள்

m.k.stalin

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஜெயலலிதா நிரூபித்தால், பதவி விலகத் தயார் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சவால் விட்டார்.

வேலூரில் நிருபர்களை சந்தித்த அவரிடம், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஸ்டாலின்,

கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள கலைஞர் வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி வருகிறார். முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா, தற்போது கூறி வரும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தயரா?.

இந்தத் திட்டம் கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் தான் அந்தத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா பொறுப்பில்லாமல் பேசியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரான அவர் முறைகேடு புகாரை ஆதாரத்துடன் நிரூபித்தால், அதற்கு பொறுப்பேற்று பதவி விலகவும் நான் தயார் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: