திரையுலகம் விஐபி-யை வம்புக்கு இழுத்த ரஜினியின் எந்திரன்

விஐபி-யை வம்புக்கு இழுத்த ரஜினியின் எந்திரன்

enthiran

எந்திரன் படத்தின் பரபரப்பு ஓய்ந்து விட்டது என்று நினைத்தால், மறுபடியும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் எந்திரன் படத்தின் மீது தனக்கு உள்ள அதிருப்தியை தெரிவித்திருக்கிறார் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சை முத்து.

எந்திரன் படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா இடம்பெறும் ஒரு காட்சியில் மரம் ஏறும் ஒரு கதாபாத்திரம் காட்டப்படுகிறதாம். நடிகர் கலாபவன் மணி நடித்திருக்கும் அந்த கதாபாத்திரம் மரத்தில் கல்லை இறக்கி குடித்து விட்டு போதையில் ஐஸ்வர்யா ராயின் கையை பிடித்து இழுப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறதாம். இதற்கும் பச்சை முத்துவிற்கும் என்ன சம்மந்தம் என்று யோசித்தால், அந்த கதாபாத்திரத்திற்கு பச்சை முத்து என்று பெயர் வைத்துள்ளார்களாம். இதுவே எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சை முத்துவை வருத்தப்பட வைத்திருக்கிறது.

சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட பச்சை முத்து, பேசுகையில் இந்த தகவல்களை கூறி வருத்தப்பட்டார். “கல் குடித்து விட்டு போதையில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்திற்கு எனது பெயரை வைப்பதா, சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தில் இருக்கும் எனது பெயரை இதுபோல இழிவுப்படுத்துவதா” என்று தனது குமுறல்களை தெரிவித்தவர், “என்னால் எந்திரன் படத்தை போல மூன்று படங்கள் எடுக்க முடியும். அப்படி எடுத்து எந்திரன் படத்தில் ஈடுபட்டவர்களை இழிவு படுத்த முடியும் ஆனால், நான் அப்படி செய்ய மாட்டேன். என்னை யாருக்கும் தெரியவில்லை என்றால் பரவாயில்லை அப்படத்தில் பணிபுரிந்த ரஜினிகாந்த் உட்பட அனைவருக்கும் என்னை தெரியும் அப்படி இருக்க எனது பெயரை இதுபோன்ற ஒரு காட்சியில் பயன்படுத்தலாமா? இது என்னவோ தெரியாமல் செய்திருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதுமட்டும் இன்றி மரம் ஏறும் சமூகத்தில் பச்சை முத்து என்ற பெயர் வைக்கும் வழக்கமும் இல்லை” என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி