அரசியல் சீனாவின் செயற்பாடுகளை கண்காணிக்க ஹம்பாந்தொட்டையில் இந்திய தூதகரம்

சீனாவின் செயற்பாடுகளை கண்காணிக்க ஹம்பாந்தொட்டையில் இந்திய தூதகரம்

India going to set embassy in Srilanka to watch China's activities

ஸ்ரீலங்காவின் தென் பகுதி துறைமுக நகரான ஹம்பாந்தோட்டையில் சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா கண்காணிக்கும் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள ஆக்கம் ஒன்றில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஸ வரும் நவம்பவர் மாதம் 11ம் நாள் தமது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்கிறார். அதே தினத்தில் நுரைச் சோலை மின்சார நிலையத்தின் முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றனர். இது தவிர, ஹம்பாந்தொட்டை துறைமுகத்திற்கான முதலாவது கப்பலும் அதே தினத்தில் வருகிறது. இந்த நிலையில், அதற்கு முன்னர் ஹம்பாந்தொட்டையில் இந்திய தூதரகம் ஒன்றை திறப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் ஹம்பாந்தொட்டையில் எங்கு எப்போது இது திறக்கப்படும் என தெரியவில்லை. மகிந்த ராஜபக்ஸ பொதுநலவாய போட்டிகளுக்காக இந்தியா சென்றிருந்த வேளையில், பிரதமர் மன்மோகன் சிங்குடன் இது தொடர்பில் பேசப்பட்டது. பின்னர், இந்திய உயர்ஸ்தானிகர் ஹம்பாந்தொட்டைக்கு பயணம் செய்து இது தொடர்பில் ஆராய்ந்து, இந்திய அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் இந்திய தூதகரம் ஹம்பாந்தொட்டையில் திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் ஹம்பாந்தோட்டையில் திறக்கப்படவுள்ள இந்தியத் தூதரகமானது முக்கியமாக சீனாவின் தென்னிலங்கை ஊடான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகவே என்று டெய்லி மிரர் சுட்டிக்காட்டியுள்ளது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி