திரையுலகம் வருமான வரி துறையினர் காட்டில் மழை ரஜினி கட்டிய வரி….

வருமான வரி துறையினர் காட்டில் மழை ரஜினி கட்டிய வரி….

rajini

எந்திரன் படத்தில் நடிக்கத் துவங்கியதிலிருந்து 2 ஆண்டுகள் அந்தப் படத்திலேயே மூழ்கிவிட்டார் ரஜினி என்றால் மிகையல்ல. படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கூறியதுபோல, படம் முடிகிற வரை சம்பளமே பெறாமல் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார் ரஜினி.

படம் வெளியாகி, உலகமெங்கும் அதை ரசிகர்கள் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள் என்ற செய்தி வரத் துவங்கியதும், சன் பிக்சர்ஸ் நிறுவனம், “எப்போது சம்பளத்தோடு தங்கள் வீட்டுக்கு வரலாம்?” என ரஜினியை தொடர்பு கொண்டனராம்.

அவர்கள் வசதிப்படி வரச்சொன்ன ரஜினி, சம்பளத் தொகையை 100 சதவீதம் காசோலையாகவே தரும்படி கேட்டுக் கொண்டாராம்.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வட்டத்தில் மிக நெருக்கமான நமது நண்பர் இப்படிக் கூறினார்:

“தன் சம்பளத்துக்கான வருமான வரித் தொகையை முழுமையாக செலுத்தியது போக மீதித் தொகையை காசோலையாக தந்துவிடுங்கள் என்று கூறிவிட்டார் ரஜினி. உடனடியாக, அவருக்குச் சேர வேண்டிய சம்பளத்தில் வருமான வரியாகச் செலுத்திய செலுத்திய தொகை ரூ 10 கோடிக்கு மேல். அதற்கான டிடிஎஸ் (Tax deducted at source) சான்றிதழையும் மீதி சம்பளத்துக்கான காசோலையையும் ரஜினிக்குக் கொடுத்தனர் கலாநிதி மாறனும் சக்ஸேனாவும்… சம்பளம் வாங்குவதில் சினிமா உலகில் இதற்கு முன் பார்த்திராத, கேட்டிராத சமாச்சாரம் இது” என்றார்.

தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேல் தனது வருமான வரியை முறையாகச் செலுத்தி வரும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் ரஜினிதான். இதற்கான சான்றிதழை தொடர்ந்து வருமான வரித்துறை ரஜினிக்கு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி