பிரபாகரன் உயிருடன் நடமாடும் வீடியோ… திருச்சியில் பரபரப்பு

விளம்பரங்கள்

prabhakaran

பிரபாகரன் உயிருடன் காட்டுப் பகுதியில் நடமாடும் வீடியோ ஒளிபரப்பப்படுவதாக பரவிய தகவலையடுத்து திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இணையதளம் ஒன்றில் இந்த வீடியோ ஒளிபரப்பாவதாகக் கூறப்பட்டதால், திருச்சியில் இன்டர்நெட் சென்டர்களில் ஏராளமானோர் குவிந்தனர்.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் ஏற்பட்ட உச்சகட்ட போரில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான விடுதலைபுலிகளும் இதில் வீரமரணம் அடைந்தனர்.

கடைசியில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ், ஆகியோரையும் கொன்றதாக கூறி அவர்களது உடல்களையும் படம் எடுத்து காட்டியது இலங்கை ராணுவம். பிரபாகரனின் தளபதியாக விளங்கிய பொட்டு அம்மனையும் இலங்கை ராணுவம் கொன்று விட்டதாக அறிவித்தது.

ஆனால் பொட்டு அம்மன் உடலை இதுவரை இலங்கை ராணுவம் கண்டுபிடிக்கவில்லை. இதற்கிடையே பிரபாகரன் போரில் சாகவில்லை. அவர் இன்னும் உயிருடன்தான் உள்ளார் என்று ஈழத் தமிழர்கள் சிலரும் விடுதலைப்புலி ஆதரவு அமைப்பு தலைவர்களும் கூறி வருகின்றனர்.

போரில் தப்பிய பிரபாகரன் பாதுகாப்பாக உள்ளதாகவும், சரியான நேரத்தில் வெளிப்படுவார் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இண்டர்நெட்டில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக ஒளிபரப்பப்பட்டதாக நேற்றிரவு திருச்சியில் தகவல் பரவியது.

அதில் அடர்ந்த தீவு போன்ற பகுதியில் பிரபாகரன் சுற்றி வருவதாகவும், தாடியுடன் அவர் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது. உடனே பிரபாகரனை பார்க்கும் ஆவலில் திருச்சியில் ஏராளமானோர் நேற்று இரவு வரை இண்டர்நெட்டில் தேடினர்.

ஆனால் அப்படி எந்த காட்சியும் தெரியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தனர்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: